

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், 17 வயதுகுட்பட்ட மாணவருடன் வகுப்பறையில் பாலியல் உறவு கொண்டதாக கூறிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான ஹீதர் மாஷ்பர்ன்-ஸ்மித் (ஆசிரியர்), ஸ்னாப்சாட்டில் காதல் கலந்த செய்திகளை 17 வயது சிறுவனுடன் பரிமாறிக்கொண்டுள்ளார். மேலும் இவர்களுக்குள்ளான நெருக்கம் அதிகமானதை தொடர்ந்து வகுப்பறையில் உடலுறவு கொண்டதையும் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாத வீடியோவில், அவர் பணியாற்றிய உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாஷ்பர்ன்-ஸ்மித்தின் வகுப்பறைக்குள் பல அதிகாரிகள் இருப்பது காவல்துறையின் ஆடை கேமராவில் பதிவாகியிருப்பது தெரிகிறது.
ஆசிரியர் மாஷ்பர்ன்-ஸ்மித், தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குறித்த விரிவான விவரங்களை காவல்துறைக்கு வழங்கியுள்ளார். மேலும் அவர் அதிகாரிகளை வகுப்பறையின் பின்புறத்திற்கு அழைத்துச் சென்று, பாலியல் செயல்களைத் தொடர்ந்து, மேசைகளையும் தரையையும் குளோராக்ஸ் கொண்டு சுத்தம் செய்ததாக ஆசிரியை காவல்துறைக்குத் தெரிவித்துள்ளார். பின்னர், அவரும் அந்த மாணவரும் மேசை நாற்காலிகளில் ஒன்றில் இரண்டாவது முறையாக உடலுறவு கொண்டதாகவும் அவர் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, மாஷ்பர்ன்-ஸ்மித்தும் அந்த மாணவரும் ஸ்னாப்சாட்டில் உரையாடி வந்துள்ளனர், அப்போது அந்த மாணவன் அவரிடம் "நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்" என்று கூறியுள்ளார். மேலும், கைது ஆணைப் பத்திரத்தின்படி, அந்த 17 வயது சிறுவன் மஷ்பர்ன்-ஸ்மித்தின் வகுப்பறைக்கு அடிக்கடி வரத் தொடங்கியுள்ளார். அங்கு அவர்கள் குறைந்தது இரண்டு முறையாவது முத்தமிட்டு, உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. கூறப்படும் அந்தச் செயல்களின் போது, மாஷ்பர்ன்-ஸ்மித் தனது திருமண வாழ்க்கை குறித்து மாணவனிடம் புலம்பியதோடு, மாணவனுக்கு 18 வயது ஆன பின்பு அந்த சிறுவனுக்காக தன் கணவரை விட்டுப் பிரிய விரும்புவதாகவும் சிறுவனிடம் ஆசிரியர் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறார்களுடன் சட்டவிரோத பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மாஷ்பர்ன்-ஸ்மித் உயர்நிலைப் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்