"பதின்மவயது சிறுவனுடன் உடலுறவு.." சிகிச்சை என்ற பெயரில் மனநல ஆலோசகர் செய்த வேலை! ரகசிய சந்திப்புகள் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

காதலி போல் நடித்து, அவனுடன் தொடர்பில் இருப்பதற்காக ஒரு போலி தொலைபேசியைப் பயன்படுத்தியுள்ளார்.
therapist misconduct
therapist misconduct
Published on
Updated on
2 min read

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு சிகிச்சையாளர், சிறார் சீர்திருத்த இல்லத்தில் தான் ஆலோசனை வழங்கிய ஒரு பதின்வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் , பின்னர் அச்சிறுவன் விடுதலையான பிறகு அச்சிறுவனோடு பதின்வயது காதலி போல் நடித்து, ஒரு போலி தொலைபேசியைப் பயன்படுத்தி ரகசியமாகத் தொடர்பில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுவனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த, முன்னாள் மனநல மருத்துவரான 26 வயது சோபியா ட்ரோட்ஸ் மீது, சட்டவிரோத பாலியல் உறவு உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் கடந்த திங்களன்று சுமத்தப்பட்டன. அடையாளம் வெளியிடப்படாத, அந்த பதின்மவயது சிறுவனை சோபியா பின்தொடர்ந்ததாக பே ஏரியா அரசு வழக்கறிஞர்கள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் குடும்பத்திற்காக வாதாடும் வழக்கறிஞர் ஜான் புரிஸ், 2024-ம் ஆண்டில் ​​சோபியா அச்சிறுவனை தவறான வழியில் பழக்கப்படுத்தத் தொடங்கினார் என்று கூறியுள்ளார். அந்த நேரத்தில், அவர் கான்ட்ரா கோஸ்டா கவுண்டியில் உள்ள ஒரு சிறார் சீர்திருத்த இல்லத்தில் சிகிச்சையாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் தனது வாடிக்கையாளர்களில் ஒருவராக அந்தச் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்க அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

வழக்கறிஞரின் கூற்றுப்படி, அந்த சிறுவன் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, சோபியா அச்சிறுவன் காதலி போல் நடித்து, அவனுடன் தொடர்பில் இருப்பதற்காக ஒரு தொலைபேசியைப் பயன்படுத்தியுள்ளார். சிறுவன் விடுதலையான பிறகு, சோபியா அவனைப் பாலியல் வன்புணர்வு செய்யத் தொடங்கியுள்ளார் என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சிறுவனுடனான தனது தொடர்பை சிறுவனின் தாயிடமிருந்து மறைப்பதற்காகவே போலி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணையாளர்களின் கூற்றுப்படி, மார்டினெஸில் உள்ள ஜான் டேவிஸ் சிறார் தடுப்பு மையத்தில் சோபியா பணிபுரிந்து வந்தார். அங்கு 17 வயது பாதிக்கப்பட்ட சிறுவன் அவரது வாடிக்கையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறுவன் சீர்திருத்த பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஏப்ரல் 1 முதல் ஜூலை 14 வரை சோபியா அச்சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார் என்று அரசுத் தரப்பு குற்றம் சாட்டுகிறது. அந்த பதின்மவயது சிறுவன் சிறார் சீர்திருத்த இல்லத்தில் இரண்டு ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த காலத்தில், அவரது சிகிச்சையாளர் என்ற தனது பதவியை சோபியா தவறாகப் பயன்படுத்தி, அந்தச் சிறுவனுடன் முறையற்ற உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்துடன் அச்சிறுவனை தயார்படுத்தினார் என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்தபோது சிறுவனின் தாயிடம் அவரது மகன் 'சிறந்த முன்னேற்றம்' அடைந்து வருவதாக தொலைபேசி உரையாடல்கள் மூலம் பாதிக்கப்பட்டவரின் தாய்க்கு உறுதியளித்து, அவரது நம்பிக்கையைப் பெறவும் சோபியா சதித்திட்டம் தீட்டினார் என்று வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பின்னர் சிறுவன் விடுதலையான பிறகு, சோபியா ஒரு மாவட்ட மனநல ஆலோசகராக அந்தச் சிறுவனையும் அவனது தாயையும் தொடர்ந்து சந்தித்து வந்ததோடு மட்டுமில்லாமல் தனது காரிலும் இரவில் சிறுவனை சந்தித்து வந்துள்ளார். சோபியா அச்சிறுவனின் தாயுடன் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொள்வார், அப்போது அவர் எவ்வளவு நன்றாக இருக்கிறார் என்பதைப் பற்றி அந்தத் தாய் பெருமையாகப் பேசுவார், அதே நேரத்தில் சிறுவனுடன் இரகசிய சந்திப்புகளையும் நடத்தி வந்தார், என்று அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார். இறுதியாக அந்தச் சிறுவன் வெளியூரில் இரவு தங்க வேண்டிய நிலை வந்தபோது, ​​அவன் எங்கே போகிறான் என்று சிறுவனின் தாய்க்குத் தெரியவில்லை. மேலும், இது சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது. பின்னர் அந்த சிறுவன் இந்தப் பெண்ணுடன் இரவு தங்கியிருந்தது வந்துள்ளது. பின்னர், அதிகாரிகள் அந்தச் சிறுவனின் வீட்டைச் சோதனையிட்டு, சோபியா தொடங்கிய முறையற்ற உறவுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததை அடுத்து, சோபியாவின் கைதுக்கு வழிவகுத்தன என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. அப்போதுதான் உண்மையில் தன் மகனுக்கு என்ன நடக்கிறது? என்பது அந்தச் சிறுவனின் தாய்க்குத் தெரியவந்துள்ளது. சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் கல்லூரி வெளியீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தின்படி, சோபியா சிகாகோவைச் சேர்ந்தவர் மற்றும் மாடிசனில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் உளவியலில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையை அறிந்த சிறுவனின் தாய், "எங்கள் மகனின் குணமடைதல் மற்றும் நல்வாழ்வை இந்த நிபுணரிடம் நாங்கள் நம்பி ஒப்படைத்திருந்தோம், ஆனால் அந்த நம்பிக்கை அடியோடு தகர்க்கப்பட்டுவிட்டது," என்று அந்தப் பதின்வயது சிறுவனின் தாய் கண்ணீர்மல்க கூறியுள்ளார். சிறாருக்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அனுப்புதல், 18 வயதுக்குட்பட்ட நபருடன் உடலுறவு, குழந்தைப் பாலியல் ஆபாசப் படங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பிற குற்றச்சாட்டுகளையும் சோபியா தற்போது எதிர்கொள்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com