
கடந்த அதிமுக ஆட்சியின்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத முன்னாள் பள்ளிக் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவா், கல்வித்துறை சார்ந்த பணப்பலன் கோரி உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தாா். அதனை விசாரித்த நீதிமன்றம், நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டில் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை அப்போதைய கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என, சம்பந்தபட்ட அதிகாரிகளின் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு, 2 வாரம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
இதையும் படிக்க || நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள்... யுஜிசி அதிர்ச்சி தகவல்!!