"14 வயது சிறுவனுடன் உடலுறவில் இருந்த.. முன்னாள் ஆசிரியர்" - பக்கா பிளான் போட்டு மாணவனுடன்.. துப்பாக்கியுடன் பள்ளிக்குள் செய்த வேலை!

யாரிடமும் சந்தேகத்திற்கு இடமான வகையில் பிடிபடாமல் இருப்பதற்காக, ஹீதரின் வீட்டில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சந்திக்கத் திட்டமிட்டதாக அந்த பாதிக்கப்பட்ட சிறுவன் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
14-year-old boy sexual abuse case
14-year-old boy sexual abuse case
Published on: 
Updated on: 
2 min read

தன் மகனைத் துன்புறுத்திய மாணவர்களைச் சுட்டுவிடுவதாக மிரட்டிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, வர்ஜீனியாவைச் சேர்ந்த முன்னாள் சிறப்புக் கல்வி ஆசிரியை ஒருவர், தனது வீட்டில் 14 வயது சிறுவனுடன் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

43 வயதான ஹீதர் லிண்ட்சே தார்ப்-புஷ், கூறப்படும் பெண் ஒருவர் தற்போது அவருக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுவன், குறைந்தது நான்கு முறையாவது ஹீதர் வீட்டிற்குச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

புகாரில் கூறப்பட்டுள்ளபடி, குற்றத்தில் யாரிடமும் சந்தேகத்திற்கு இடமான வகையில் பிடிபடாமல் இருப்பதற்காக, ஹீதரின் வீட்டில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சந்திக்கத் திட்டமிட்டதாக அந்த பாதிக்கப்பட்ட சிறுவன் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார். புகாரின்படி, ஹீதரை பற்றிய விசாரணைக்கு பின்னர், இருவருக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் பாலியல் உறவை உறுதிப்படுத்தும் செய்திகளை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக, ஹீதர் நவம்பர் 12 அன்று கைது செய்யப்பட்டு, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. ஹீதர் இதற்கு முன்னர், பிப்ரவரி 2020 முதல் ஜூன் 2024 வரை செசபீக் பொதுப் பள்ளிகளில் சிறப்புக் கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

புகாரில் குறிப்பிட்டுள்ளபடி, ஹீதர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் பள்ளியில் அவரது பணி முடிவடைந்த பின்னரே நடந்தவை என்றும், அவற்றில் எதுவும் பள்ளி வளாகத்தில் நடைபெறவில்லை என்றும் காவல்துறை தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹீதர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தோ, அல்லது அவர் அந்த பாதிக்கப்பட்ட சிறுவனை முதன்முதலில் எப்படி?, எங்கே சந்தித்தார்? என்பது குறித்தோ விவரங்கள் எதுவும் பொதுவெளியில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. புகாரின்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகள், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் பாலியல் உறவு கொண்டது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகள், மேற்பார்வைப் பொறுப்பில் உள்ள ஒருவர் (ஆசிரியர்) குழந்தையிடம் தகாத முறையில் நடந்துகொண்டது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகள், மற்றும் கூறப்பட்ட குற்றங்களை எளிதாக்க தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தியது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளை ஹீதர் எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

“தன் மகனைத் தொந்தரவு செய்த மாணவர்களைச் சுட்டுவிடுவதாக” மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அந்த முன்னாள் ஆசிரியை 2025 நவம்பரில் கைது செய்யப்பட்டதாக, நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டியுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்தக் குற்றச்சாட்டுகள் 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆசிரியரே பதின்மவயது சிறுவன் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த நிகழ்வினை குறித்து உயர்மட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.