தொடரும் தற்கொலைகள்..! அணையில் விழுந்து நான்கு பேர் தற்கொலை முயற்சி…! இருவர் பலி!!

இதில் சாரதாம்மாள், லட்சுமண மூர்த்தி ஆகியோர் அணையில் உள்ள நீரிலேயே மூழ்கி இறந்தனர். ஜோதி மற்றும் தீபிகா...
krishnagiri suicde
krishnagiri suicde
Published on
Updated on
1 min read

 குடும்பப் பிரச்சினை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் விழுந்து நான்கு பேர் தற்கொலை முயற்சி. 2 பேர் உயிர் இழப்பு - 2 பேர் ஆபத்தான முறையில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதி

ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த சாரதாம்மாள் (75) மருமகன் லட்சுமண மூர்த்தி (50) அவரின் மகள் ஜோதி (45) மகள் தீபிகா (20) ஆகிய நான்கு பேரும் இன்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் உள்ள சிறிய மதகுகள் அருகில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதில் சாரதாம்மாள், லட்சுமண மூர்த்தி ஆகியோர் அணையில் உள்ள நீரிலேயே மூழ்கி இறந்தனர். ஜோதி மற்றும் தீபிகா ஆகியோரை அருகில் இருந்த மீனவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று தஞ்சாவூரில் கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகளுடன் கல்லணை  கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு குடும்பம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com