நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல், திட்டச்சேரி, வேட்டைக்காரன் இருப்பு, திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு திருவண்ணாமலைச் சேர்ந்த HGS DAIRIES AND AGRO LIMITED என்ற தனியார் நிதி நிறுவனத்தினர், கிராம பெண்களை அணுகி, மாதம் 500 ரூபாய் வீதம், 5 ஆண்டுகள் செலுத்தி வந்தால், முதிர்ச்சி அடைந்தவுடன்,30,000 ரூபாயுடன் வட்டியாக 10,000 ரூபாயும், போனசாக 3 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 43,000 வழங்கப்படும் என ஆசை வார்த்தையை கூறி ஏஜெண்டுகளை நியமித்து 1000-க்கும் மேற்பட்ட பெண்களிடம் 1 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளனர்.