என் வியாபாரத்தையே கெடுக்குறியா? பூக்கடையில் ஏற்பட்ட தகராறு.. வீடு புகுந்து வெட்டிய நண்பர்கள்!

கோயிலுக்கு சென்று விட்டு வந்தபோது கார்த்திக் வடிவேலுவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே கைகலப்பு நடந்துள்ளது. பின்னர் அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்த நிலையில் வடிவேலு வீட்டிற்கு சென்றுள்ளார்
tenkasi murder news
tenkasi murder newstenkasi murder news
Published on
Updated on
2 min read

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் உள்ள தேவர் குளம் பகுதியை சேர்ந்தவர் 52 வயதான வடிவேலு இவர் அதெ பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். வடிவேலுவின் கடைக்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த 48 வயதான கார்த்திக் என்பவர் பூக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.  இருவருக்கும் அடிக்கடி வியாபாரத்தினால் தகராறு ஏற்பட்டுள்ளது. 

தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கார்த்தி தனது கடைக்கு அழைப்பதாக கூறி வடிவேலு கார்த்திக்கிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. பிறகு அருகில் இருந்த கடைக்காரர்கள் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் (ஜூன் 14) தேதி வடிவேலு தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கார்த்திக்கை திட்டிக்கொண்டே சென்றுள்ளார். பின்னர் அவர்கள் கோயிலுக்கு சென்று விட்டு வந்தபோது கார்த்திக் வடிவேலுவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே கைகலப்பு நடந்துள்ளது. பின்னர் அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்த நிலையில் வடிவேலு வீட்டிற்கு சென்றுள்ளார்.

tenkasi murder news
tenkasi murder newstenkasi murder news

ஆனால் தன்னை அவமானப்படுத்தி விட்டார் என மிகுந்த கோபத்தில் இருந்த கார்த்திக் தனது நபர்களுடன் சேர்ந்து இரவு மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து கார்த்திக் அவரது நண்பர்கள் பிரபாகரன் ரமேஷ் என மூவரும் வடிவேலுவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே மது போதையில் இருந்த மூவரும் வடிவேலுவை வம்பிற்கு இழுத்து அவரது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வடிவேலுவின் கையை வெட்டியுள்ளனர்.

இதில் அதிகப்படியான ரத்தம் வெளியேறி வடிவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விடிந்ததும் வடிவேலு வீட்டிற்கு வெளியில் இறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி போலீசாருக்கு தகவளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வடிவேலுவின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கார்த்திக்கை கைது செய்து நடத்திய விசாரணையில் கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து வடிவேலுவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. கடையில் ஏற்பட்ட தகராறுக்கு வீடு புகுந்து வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com