நண்பரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட நண்பர்கள்.. சினிமா பாணியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!!

நண்பரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட நண்பர்கள்.. சினிமா பாணியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நண்பரின் மனைவியை மயக்கி தகாத உறவில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
Published on

செஞ்சி அருகேயுள்ள ஈச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பரணிதரன். இவர் தற்போது அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் பரணிதரனின் நண்பர்களான திருமங்கை மன்னன் மற்றும் அருள்முருகன் ஆகியோர் நெருங்கிய நட்பு காரணமாக தேர்தல் நேரத்தில் உதவியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பரணிதரனின் மனைவி ஜெயலட்சுமியுடன் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்ததாகவும் தெரிகிறது. இந்த நட்பு எல்லை மீறி தகாத நட்பாக மாறி மொபைல் போன்களில் அந்தரங்க வீடியோக்களை பகிர்வதும், வீடியோ கால்களில் அடிக்கடி பேசுவதுமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் பரணிதரன், மனைவி ஆடை இல்லாமல் வீடியோ காலில் பேசியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மனைவியை கையும் களவுமாக பிடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து  பரணிதரன், தனது நண்பர்களான திருமங்கை மன்னன் மற்றும் அருள்முருகன் ஆகிய இருவர் மீதும் வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com