young boy murdered
young boy murdered

கூட்டாக சேர்ந்து குடிக்கச்சென்ற நண்பர்கள்… கொலையில் முடிந்த வாய்த்தகராறு!? பின்புலம் என்ன!?

தாளமுத்து நகர் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி ....
Published on

தூத்துக்குடி தாளமுத்து நகரில் இருந்து வெள்ளப்பட்டி செல்லக்கூடிய காட்டுப்பகுதியில் சூர்யா என்ற வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாளமுத்து நகர் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள துரைசிங் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மிட்டாய் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சூர்யா (21) கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார். சூர்யா கஞ்சா போதைக்கு அடிமையாகி சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை சூர்யா தாளமுத்து நகர் பகுதியில் இருந்து வெள்ளப்பட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலை வழியாக நண்பர்கள் மூன்று பேருடன் மது குடிக்க வெள்ளப்பட்டி அந்தோணியார் கோயில் பின்புறம் உள்ள முட்புதர் நிறைந்த காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

 அதில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து சூர்யாவை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சூர்யா பரிதாபமாக பலியானார். 

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் காவல்துறையினர் சூர்யாவின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சூர்யாவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர் சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். தூத்துக்குடியில் சூர்யா என்ற வாலிபர் காட்டுப்பகுதியில் நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com