மனைவியோடு தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்த கணவன்! ஆபாச தளத்தில் பதிவேற்றம்.. 4 வயது மகள் முன்னிலையிலும் பாலியல் செயல்பாடா?

தனது மனைவியும் அவரும் தனிமையில் இருந்த அந்தரங்க தருணங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
Private video uploaded online
Private video uploaded online
Published on
Updated on
1 min read

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் தனது மனைவியின் அந்தரங்க வீடியோக்களை ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியதாகவும், தங்களது நான்கு வயது மகளின் முன்னிலையில் பாலியல் செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 31 வயதான நபர் ஒருவர் கேரளாவின் கோட்டயத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மய்யநாட்டைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபர், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது மனைவி மற்றும் மகளுடன் இங்கிலாந்தில் வசித்து வந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தம்பதியினர் காதலித்து வந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இங்கிலாந்தில் இருந்தபோது, ​​தனது மனைவியும் அவரும் தனிமையில் இருந்த அந்தரங்க தருணங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும், அந்த வீடியோக்களை ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியுள்ளார் என்பதை அப்பெண்ணின் நண்பர்கள் தெரிவித்த பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

அப்பெண் முதலில் தன் கணவரை எச்சரித்துள்ளார். ஆனால் பின்னர் அவரது கணவரின் கைபேசியைச் சோதித்தபோது, ​​​​அவர்களின் மகளின் முன்னிலையில் அவர் ஒரு பாலியல் செயலில் ஈடுபடுவதைக் காட்டும் வீடியோவைக் கண்டதாக அந்த பெண் கூறியுள்ளார். பின்னர் இந்த விவகாரத்தால் அந்தக் குடும்பம் கேரளாவுக்குத் திருப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று நாட்கள் ஆலோசனை பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஆலோசனைக்குப் பிறகும் அவர் குழந்தையை உள்ளடக்கிய இதுபோன்ற மற்றொரு காணொளியைப் பதிவு செய்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அவரது மனைவி அவரைக் கேள்வி கேட்டபோது, ​​அவரது மனைவியையும் தாக்கியதாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், காவல்துறையினர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர். காணொளிகளை ஆய்வு செய்த பின்னர், போக்சோ சட்டத்தின் (POCSO) கீழ் காவல்துறை ஒரு தனி வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. சம்பவத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவானதாகவும், ஆனால் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. புகார்தாரருக்காக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் வி குருப், குற்றம் சாட்டப்பட்டவர் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியவர், மேலும் தனது மனைவியுடன் இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார். ஆலோசனை வழங்கப்பட்ட பின்னரும், அவர் மீது கூறப்பட்ட குற்றங்களைத் தொடர்ந்ததாகத் தெரிகிறது,” என்று வழக்கறிஞர் குருப் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அப்பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதிலும், விசாரணையை நடத்துவதிலும் காவல்துறை தவறுகள் செய்ததாக வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com