14 வயது சிறுமிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை! 3 தெருக்கூத்து கலைஞர்கள் செய்த கொடூரம்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

தெருக்கூத்து பார்க்க தனது பெரியம்மாவுடன் சென்றுள்ளார்
pocso
Published on
Updated on
1 min read

தர்மபுரி மாவட்டத்தில் தெருக்கூத்து கலைஞர்களால் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது தர்மபுரி போக்சோ நீதிமன்றம்.

தர்மபுரியில் நல்லம்பள்ளி அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வந்தாள். அப்போது கோடைகால விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்திருக்கிறாள். அவரது தந்தை சிறுமியை அவளின் பெரியம்மா வீட்டில் பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டு, தினமும் வேலைக்கு சென்று  வந்திருக்கிறார். மே மாதம் 24 ஆம் தேதி அந்த கிராமத்தில் கோவில் திருவிழா நடந்துள்ளது. அப்போது அந்த ஊருக்கு தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்த தெருக்கூத்து கலைஞர்கள் வந்துள்ளனர். தெருக்கூத்து நாடகம் தொங்கியதும், அதை காண ஊர்மக்கள் அனைவரும் சென்றுள்ளனர். அந்த 14 நன்கு வயது சிறுமியும் தெருக்கூத்து பார்க்க தனது பெரியம்மாவுடன் சென்றுள்ளார். இடையில் தூக்கம் வருவதாக கூறி வீட்டிற்கு தனியே சென்றுள்ளார். அப்போது தெருக்கூத்து கலைஞர்களான கொல்லாபுரி(63) மணிகண்டன்(60) மற்றும் மஞ்சுநாதன்(34)  ஆகிய மூன்று பேர் வீட்டிற்கு தனியாக சென்ற சிறுமியை வழிமறித்து வயல்வெளிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.      

மேலும் அவர்கள் சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ததை வெளியே சொன்னால் சிறுமியை “கொன்று விடுவதாகவும்” மிராட்டியுள்ளனர். பயத்தில் வீட்டிற்கு சென்று சிறுமி சம்பவம் குறித்து யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார். ஐந்து நாட்களுக்குப் பிறகு சிறுமியின் உடல்நிலை மோசமாகியுள்ளது. மேலும் வழக்கத்துக்கு மாறாக சிறுமி சோர்வாக இருந்துள்ளார்.  பின்னர் தனக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக் குறைவு குறித்தும் திருவிழா அன்று நடந்த பலாத்காரம் குறித்தும் குடும்பத்தினருடன் சொல்லி இருக்கிறார் சிறுமி. இதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் தெருக்கூத்து கலைஞர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மூன்று தெரு கூத்து கலைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஊர்மக்கள் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறை  மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. இது தொடர்பாக இரண்டு முதியவர்கள் மற்றும் ஒரு இளைஞரை கைது செய்து இருக்கிறது காவல்துறை.

பின்னர் போக்சோ வழக்கு பதிவு விசாரணை செய்து தெருக்கூத்து கலைஞர்கள் 3 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்தது தருமபுரி போக்சோ நீதிமன்றம். மேலும் குற்றவாளிகளான தெருக்கூத்து கலைஞர்கள் கொல்லாபுரி(63) மணிகண்டன்(60) மற்றும் மஞ்சுநாதன்(34) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அசின்பானு தீர்ப்பளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com