பெண்களின் புகைப்படத்தை மாப்பிங் செய்து மிரட்டும் கும்பல்-பாதிக்கப்பட்ட பெண்கள் பேட்டி...

பெண்களின் புகைப்படத்தை மாப்பிங் செய்து மிரட்டும் கும்பல்-பாதிக்கப்பட்ட பெண்கள் பேட்டி...

திருச்சியைச் சேர்ந்த கவிதா ,சென்னையை சேர்ந்த மும்தாஜ், கோவையைச் சேர்ந்தவரும் பாண்டிச்சேரியில் வசித்து வருபவருமான சித்ரா உள்ளிட்ட மூன்று பெண்கள் கோவையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அவர்கள் 

வீட்டில் ஸ்பை கேமராக்கள்

ஐந்து பேர் கொண்ட கும்பல் சமூக ஊடகங்கள் மற்றும் youtube போன்ற தளங்கள் வாயிலாக பெண்களை கவர்ந்து, அவர்களிடம் நன்கு பழகி அவர்கள் வலையில் விழச் செய்வதாகவும் பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களது வீட்டில் ஸ்பை கேமராக்களை நிறுவி அதன் மூலம் பெண்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொள்வதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.மேலும் அந்த வீடியோக்களை மாப்பிங் செய்து அவர்களுக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணம் தர மறுத்தால் அந்த வீடியோக்களை அவர்களுக்கு சொந்தமான youtube தளங்களில் பதிவேற்றம் செய்து பலருக்கும் அதனை அனுப்பி வைத்து மிரட்டல் விடுப்பதாகவும் கூறினர். 

புகாரளித்தும் எந்த நடவடிக்கையுமில்லை 

இது குறித்து மூவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததினால் கோவையிலுள்ள பிரபல வழக்கறிஞரை சந்தித்து சம்பவம் தொடர்பாக வழக்கு தொடுக்க இருப்பதாகவும் கூறினர்.

தொடர் மிரட்டல் விடுத்தும் அந்தரங்க படங்களை யூடியூபில் பதிவேற்றம் செய்தும் வரும் நபர்களின் செயல்பாடுகளால் கவிதா என்ற பெண் இரு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் இச்செயலில் தாங்கள் மட்டுமல்லாது பல பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே காவல்துறையினர் பாரபட்சமின்றி செக்ஸ் டார்ச்சர் செய்யும் இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com