ஆறு பதின்ம வயது மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஜார்ஜியா ஆசிரியை ஒருவர், தனக்கு ஒன்லிஃபேன்ஸ் கணக்கு இருப்பது தெரிந்த மாணவர்களால், மிரட்டப்பட்டதாகக் கூறப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலெக்சாண்டர் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் உயிரியல் ஆசிரியையான 25 வயது மாரிஸ் நிக்கோல்ஸ், தனது மாணவர்களில் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். சில வாரங்களுக்குப் பிறகு, மேலும் ஐந்து பதின்ம வயதினரைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
பள்ளியின் கால்பந்து செயல்பாட்டு மேலாளராகவும் பணியாற்றிய நிக்கோல்ஸ் மீது, குழந்தைப் பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களைத் திரித்தல் மற்றும் குற்றம் சாட்டியவர்கள் சம்பந்தப்பட்ட, பதின்வயதுப் பெண் ஒருவரையும் உள்ளடக்கிய, பாலியல் ரீதியாகத் தயார்படுத்துதல் உள்ளிட்ட 11 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. டக்ளஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் இந்த வழக்கை விசாரித்து வருவதால், பல பிடியாணை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதில் நிக்கோல்ஸின் ஸ்னாப்சாட் மற்றும் ஒன்லிஃபேன்ஸ் கணக்குகளை ஆராய்வதும் அடங்கும். ஆசிரியரின் ஒன்லிஃபேன்ஸ் கணக்கு பற்றி அறிந்திருந்த அந்த பள்ளியில் உள்ள சில மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் போடா வேண்டும் என்று அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக குற்றம் சாட்டியவர்களில் ஒருவருடன் நிக்கோல்ஸ் ஒரு பொது இடத்தில் உடலுறவு கொண்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 2 ஆண்களுடன் வாகனங்களில் இரண்டு தனித்தனி பாலியல் சந்திப்புகளில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, நிக்கோல்ஸ் தனது காரில் ஒரு பதின்ம வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மறுநாள் ஒரு கோல்ஃப் மைதானத்தில் தனது காரில் இரண்டாவது பதின்ம வயது சிறுவனுடனும் உடலுறவு கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், நிக்கோல்ஸ் தான் கற்பனை செய்த பாலியல் செயல்களை விவரித்து மற்ற பதின்ம வயதினருக்கு ஆபாசமான பாலியல் செய்திகளை அனுப்பியதாகவும், மேலும் 16 வயதுக்குட்பட்ட இரண்டு பதின்ம வயதினருடன் வீடியோ காலில் இருந்தபோது பாலியல் பொம்மையைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், நிக்கோல்ஸ் ஒரு பெண்ணுக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியதாகவும், அந்த ஆபாசப் படம் குறித்து விவாதிப்பதற்கு முன்பு ஆபாச திரைபடத்தொடரை பார்க்கும்படி அவரை ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது. கைது வாரண்டின்படி, அவர் ஆரம்பத்தில் கைது செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, தான் ஆபாசச் செய்திகளை அனுப்பியிருந்த பதின்ம வயதினரில் ஒருவரிடம் தங்கள் உரையாடலை நீக்குமாறு நிக்கோல்ஸ் கூறியுள்ளார். திருமணமாகி ஒரு குழந்தை உள்ள அந்த ஆசிரியை, ஆரம்பத்தில் 40,000 டாலர் பிணைத்தொகையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டாலும், 74,000 டாலர் பிணைத்தொகையில் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.