
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா துருஞ்சம்பூணடி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிவேல். இவருக்கும் விருத்தம்மாள் என்ற பெண்ணுக்கு திருமனாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் பழனிவேலுவுக்கும் விருத்தம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பழனிவேல் விருத்தம்மாளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
பின்னர் சில வருடங்களுக்கு பிறகு பழனிவேல் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜெயக்கொடி மற்றும் பழனிவேலுவுக்கு 20 வயதில் பூபாலன் என்ற மகனும் 18 வயதில் புவனா என்ற மகளும் இருந்து வருகின்றன. பழனிவேல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் முதல் மாணவி விருத்தம்மாள் தனது இரண்டு மகன்களுடன் திண்டிவனத்தில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பழனிவேல் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில் ஜெயக்கொடியும் தனது பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த ஜெயக்கொடியை மர்ம நபர்கள் தலையில் பலமாக அடித்து கொலை செய்து இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது விவசாய நிலத்தில் ஜெயக்கொடியின் மூளை சிதறி கீழே விழுந்துள்ளது. கொலை செய்தது யாருக்கும் தெரியக்கூடாது என எண்ணிய மர்ம நபர்கள் ஜெயக்கொடியின் உடலை கல்லை கட்டி அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசி சென்றுள்ளனர்.
காலையில் விவசாய நிலத்தின் வழியே சென்ற அப்பகுதி மக்கள் சிதறி கிடந்த மூளையை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த ஜெயக்கொடியின் உடலையும் விவசாய நிலத்தில் இருந்த மூளையையும் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் தனியாக இருந்த பெண் சொத்து தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண் நள்ளிரவில் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் ஜெயக்கொடி கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் பழனிவேலின் முதல் மனைவி மற்றும் மகன்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.