“தலைக்கேறிய போதையில் கிடந்த சிறுமி” - காரில் அழைத்து வந்து மார்க்கெட்டில் தள்ளிய வாலிபர்.. மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமையா?

கீழே விழுந்து கிடப்பதை பார்த்து உடனடியாக அவரை மீட்டு, திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்..
child abuse road protest
child abuse road protest
Published on
Updated on
2 min read

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் 43 வயதுடைய மாரீசெல்வன். இவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று மதியம் தனது காரை எடுத்து கொண்டு மாரி செல்வன் சிவகங்கையிலிருந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள கல்மந்தை காலனி குடியிருப்பில் வசிக்கும் ஆதிரா (எ) ஆதி தமிழன் என்கிற திருநங்கை மற்றும் அவரது மற்ற நண்பர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர்களிடம் பேசிவிட்டு கிளம்பும் போது திருநங்கை ஆதிராவின் தங்கை கடைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்த மாரி செல்வன் அவரை தனது காரில் ஏற்றி மாலை 5 மணி அளவில் கல்மந்தை காலனியிலிருந்து வெளியில் அழைத்து சென்றார்.

பின்னர் மாலை 6:30 மணி அளவில் சிறுமியை மாரிசெல்வன் திருச்சி கீரைக்கடை பஜார் பகுதியில் காரில் இருந்து இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிறிது தூரம் தட்டு தடுமாறி நடந்த சிறுமி சுயநினைவின்றி கீழே விழுந்திருக்கிறார். இதனை பார்த்த பஜார் பகுதியிலிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சிறுமி போதை தலைக்கேறிய நிலையில் சுயநினைவின்றி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து உடனடியாக அவரை மீட்டு, திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சிறுமிக்கு என்ன நடந்தது என்ன என்ற ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் கார் ஓட்டுநர் மாரீசெல்வனைத் தேடி வந்த நிலையில் இரவு 7:30 மணி அளவில் மீண்டும் கல்மந்தை காலனிக்கு வந்த அவரைப் பிடித்துத் சரமாரியாகத் தாக்கினர். இதில் மாரீசெல்வனுக்கு மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வரை சிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சுயநினைவின்றி தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். எனவே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் இழைக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Admin

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். தொடர்ந்து சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறுமியை பார்த்துவிட்டு வெளியே வந்த அவரது சித்தி “சிறுமிக்கு ஜூஸில் எதோ கலந்து கொடுத்து இவ்வாறு செய்திருக்கின்றனர் தன்னை சுற்றி அதிக ஆண்கள் இருந்ததாகவும், உடல் முழுவதும் வெளிபாதகவம் சிறுமியும் கூறினார்” என தெரிவித்துள்ளார்.

எனவே அவர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் இதற்கு சிறுமியின் அக்காவான திருநங்கையாக மாறிய நிறைவும் ஒரு காரணம் எனவே அவரையம் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதன் காரணமாக போலீசார் உரிய விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் உண்மை வெளிவரும் என கூறி அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமி மது போதையில் சுயநினைவின்றி கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com