“அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த காதலன்” - பாதியிலேயே நின்ற திருமணம்.. கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலம்!

ஜெயஸ்ரீ அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஷைல் என்ற வாலிபரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார்...
jaya sri and srishail
jaya sri and srishail
Published on
Updated on
1 min read

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நிலையில் சில வாலிபர்கள் காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதிலும் சிலர் பெண்கள் அவர்களது காதலை ஏற்கவில்லை என்றாலோ அல்லது காதலை முறித்து கொண்டாலோ அவர்களை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தை ரீதியாகவும், காதலிக்கும் போது எடுக்கும் புகைப்படங்களை வைத்தும் மிரட்டி அசிங்கப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அது போல ஒரு சம்பவம் தான் தற்போது கர்நாடக மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் பண்டல் கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் ஜெயஸ்ரீ இவருக்கு வரும் (ஏப் 27) ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இது குறித்து கேட்டபோது ஜெயஸ்ரீயின் முன்னாள் காதலன் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. ஜெயஸ்ரீ அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஷைல் என்ற வாலிபரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார்.

பின்னர் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவ்வப்போது தகராறு நடந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் வருத்தமடைந்த ஜெயஸ்ரீ, ஸ்ரீஷைல் உடனான காதலை கைவீட்டுள்ளார் ஆனால் தொடர்ந்து காதலித்து வந்த ஸ்ரீஷைல் தன்னுடன் பேசுமாறும், மீண்டும் தன்னை காதலிக்குமாறும் ஜெயஸ்ரீயை வற்புறுத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் ஜெயஸ்ரீக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்வதை அறிந்து திருமணத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி இருவரும் காதலித்த போது எடுத்த நெருக்கமான அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஜெயஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள இருந்த மாப்பிளைக்கு அவரது உறவினர்களுக்கும் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜெயஸ்ரீ சமூக ஊடகங்களிலும் அவரது புகைப்படங்கள் இருப்பதை பார்த்து கடும் மன உளைச்சல் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். எனவே தற்கொலைக்கு காரணமான ஸ்ரீஷைல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com