காதலன் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய காதலி...அம்பலமாகிய நாடகம்!! அப்படி என்ன தான் நடந்தது?

காதல் ஜோடி மீது கும்பல் தாக்குதல் நடத்திய வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக வாலிபரின் கொலைக்கு காதலியே சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது.
காதலன் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய காதலி...அம்பலமாகிய நாடகம்!! அப்படி என்ன தான் நடந்தது?
Published on
Updated on
1 min read

மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாகிம் கடற்கரையில் அமர்ந்திருந்த காதல் ஜோடி மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காதலன் வாசிம்சவுத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் இருந்த இளம்பெண் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட கோவண்டியை சேர்ந்த பால்கிருஷ்ணா மற்றும் கம்ரன் என்ற 2 பேரை உடனடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்  பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது.

அதாவது வாசிம் சவுத்ரியின் கொலைக்கு முழு மூளையாக செயல்பட்டவரே அவருடைய காதலி தான்  என்பது அம்பலமாகி உள்ளது. ஏனென்றால் , வாசிம் சவுத்ரியின் நடத்தை பிடிக்காததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் அப்பகுதியை சேர்ந்த பால்கிருஷ்ணா மற்றும் கம்ரன் ஆகியோருடன் உதவியை நாடி உள்ளார். 

இந்நிலையில் ஒரு வழியாக அவரை கொலை செய்வதற்கு திட்டம்போட்ட அந்த இளம்பெண், அவர்களின் திட்டப்படி சம்பவத்தன்று இரவு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வாலிபரை இளம்பெண் அழைத்து சென்றுள்ளார். அங்கு இளம் பெண்  அவரின் நண்பர்களுடன் இணைந்து வாலிபரை தாக்கி கொலை செய்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து காதலன் கொலையில் தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்று கருதிய இளம்பெண் தன்னை, தானே காயப்படுத்திக்கொண்டு மர்ம நபர்கள் தாக்கியதாக நாடகமாடியுள்ளார்.  மேலும், இந்த கொலைக்கு வாசிம் சவுத்ரியின் உறவினர் பெண்ணான ஹினா சேக் என்பவரும் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியானது. ஹினா சேக்கை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் சவுத்ரியை பழிவாங்க நினைத்து இந்த கொலைக்கு உதவியதாக தெரிகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் போலீசாரின் தீவிர விசாரணையில் தற்போது  வெளிவந்துள்ளது.

இதனையடுத்து கொலையில் தொடர்புடைய வாசிம் சவுத்ரியின் காதலி, ஹினா சேக் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.   மேலும் இந்த கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சியிலும் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com