“பேச மறுத்த காதலனை எரித்து கொன்ற காதலி” - புரபோஸ் செய்வதாகக் கூறி வெறிச்செயல்… நாற்காலியுடன் சேர்ந்து கருகிய வாலிபர்!

கிரண் தன்னை ஏமாற்றுவதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றும் நினைத்து...
kiran and prema
kiran and prema
Published on
Updated on
2 min read

கர்நாடக மாநிலம், தெற்கு பெங்களுருவில் உள்ள அஞ்சனபுர பகுதியை சேர்ந்தவர் 29 வயதுடைய பிரேமா. இவர் தாய் மாற்று தம்பியுடன் வசித்து வந்த நிலையில் அருகில் உள்ள கம்யூனிகேஷன் சென்டரில் மேலாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரியும் கிரண் என்பவருடன் இரண்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகி வந்திருக்கின்றனர். பின்னர் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது

எனவே இருவரும் அவ்வப்போது வெளியில் செல்வது நீண்ட நேரம் போனில் பேசிக் கொள்வது என காதலித்து வந்திருக்கின்றனர். ஆனால் நாளடைவில் பிரேமாவுடன் வெளியில் செல்வதை குறைத்து கொண்ட கிரண் தொடர்ந்து பிரேமாவுடன் பேசுவதையும் தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பிரேமா காதலித்துவிட்டு கிரண் தன்னை ஏமாற்றுவதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றும் நினைத்து ஆத்திரமடைந்து காதலனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

boyfriend-fire
boyfriend-fire

அதன்படி நேற்று (ஏப் 21) காலை காதலன் கிரணுக்கு போன் செய்த பிரேமா “வீட்டில் அம்மா, தம்பி இல்லை.. எனவே நீ எங்க வீட்டுக்கு வா, நம்ம கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணுவோம்” என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பிரேமா வீட்டிற்கு கிரண் வந்த நிலையில் இருவரும் சேர்ந்து ஒன்றாக உணவருந்தி விட்டு பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது கிரணிடம் வெளிநாட்டு முறையில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி பிரேமா அவரை நாற்காலியில் அமர வைத்து கயிற்றால் கட்டி போட்டிருக்கிறார்.

தொடர்ந்து எதிர்பார்க்காத நேரத்தில் அவரிடம் இருந்த தீ பற்றும் திரவத்தை கிரண் மீது ஊற்றி தீ வைத்த நிலையில் உடல் முழுவதும் தீ பரவி சம்பவ இடத்திலேயே உடல் கருகி அவர் உயிரிழந்தார். அப்போது கிரணின் அலாரம் சத்தம் கேட்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பிரேமா காதலனை எரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து பிரேமாவை கைது செய்த பத்ரஹள்ளி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com