BREAKING; ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை! ரூ.90 ஆயிரம் அபராதம்!

ஞானசேகரன் மீதான 11 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டநிலையில், இன்று வழக்கின் தீர்ப்பு விபரங்கள் வெளியாகி உள்ளது.
rape acused gnasekaran
rape acused gnasekaran
Published on
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள  ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் “ஞானசேகரன் குற்றவாளி” என  சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த 28 -ஆம் தேதி காலை  தீர்ப்பளித்தது. 

ஞானசேகரன் மீதான 11 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டநிலையில், இன்று வழக்கின் தீர்ப்பு விபரங்கள் வெளியாகி உள்ளது. இதில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.90,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாணவி ஒருவர் கோட் டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24-ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படை யில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஞானசேகரனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இதனையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில்  கடந்த ஏப்ரல் 23ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல்துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். சுமார் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட் டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த 28 -ஆம் தேதி  காலை நீதிபதி இந்த வழக்கில் “ஞானசேகரன் குற்றவாளி” என தீர்ப்பு அளித்துள்ளார். 

ஞானசேகரன் தரப்பில் மற்றொரு கோரிக்கையும் வைக்கப்பட்டது. தனக்கு “8 -ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையும், வயதான தாயும் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் “ என கோரியுள்ளார். 

ஐந்து மாதங்களில் நடந்த  இந்த வழக்கு புலன் விசாரணை, சாட்சி விசாரணை முடிவில் ஞானசேகரனுக்கு எதிராக 11 சாட்சியங்கள் உள்ளன. 

தீர்ப்பு விபரங்கள்!

புழல் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில் அவர் நீதிபதி ராஜலக்ஷ்மி  முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் 30 ஆண்டுகள் குறையாமல் சிறையில் இருக்க வேண்டும்  என தெரிகிறது. ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் மூன்று ஆண்டுகள், 2 ஆண்டுகள் என சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டுமானால் கருணை மனு போடலாம் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com