அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து..!

திருப்பூரில், அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து..! ஒருவர் பலி..!
அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து..!
Published on
Updated on
1 min read

பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, குமரன் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே திசையில் இருசக்கரவாகனத்தில் கணவன் மனைவி இருவரும் பழைய பேரூந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். திடீரென எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண் அரசு பேருந்தின் சக்கரத்தில் விழுந்தார். இதில் அந்த  பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவர் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார், அரசு பேருந்து  ஓட்டுனர் முத்துமாணிக்கத்திடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து வடக்கு காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com