அரசு மருத்துவமனை செவிலியர் அடித்து கொலை..!

தனியாக இருந்த செவிலியரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு வலைவீச்சு..!
அரசு மருத்துவமனை செவிலியர் அடித்து கொலை..!
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசு மருத்துவமனை செவிலியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் செல்வி.  இவருடைய கணவர் சுரேஷ் திண்டுக்கல் நாகல் நகரில் சமையல் வேலை செய்து வரும் நிலையில் அவருடன் மகனும், மகளும் திண்டுக்கல்லிலேயே  தங்கி படித்து வருகின்றனர். பாப்பம்மாள்புரத்தில் செல்வி மட்டும் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு கணவர் சுரேஷ் தனது மனைவிக்கு பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுரேஷ், உறவினர்களிடம் தொடர்பு கொண்டு செல்வி வீட்டில் போய் பார்க்கும் படி கேட்டுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்த போது, செல்வி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு கொலையாளியை தேடி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com