பண்ருட்டி அருகே அரசு ஊழியர் கழுத்து அறுத்து கொலை!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு ஊழியர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பண்ருட்டி அருகே அரசு ஊழியர் கழுத்து அறுத்து கொலை!!
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு புது காலனி கிராமத்தைச் சேர்ந்த திலிப்குமார்(வயது 59). இவருக்கு அஞ்சலை என்ற மனைவி,  வினோத் குமார் என்ற மகன் மற்றும் ராதிகா, வினித்தா என்று இரு மகள்கள் உள்ளன. திலிப்குமார் வல்லம் அரசு ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார்.

மயமான திலிப்குமார்

இவர் நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள பாளையகார் நிலம் வழியாக தோப்புக்கு சென்றுள்ளார். இரவு சென்றவர் வீடு திரும்பவில்லை.. இதனால், அச்சம் அடைந்த மனைவி மற்றும் பிள்ளைகள் பல இடங்களில் தேடியும் திலிப்குமார் கிடைக்காததால் பண்ருட்டி காவல் நிலையத்தில் காணவில்லை என்று  புகார் கொடுத்துள்ளனர்.

கரும்பு தோட்டத்தில் திலிப்குமார்

திலிப்குமார் கரும்பு தோட்டத்தில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மேலும் அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் செயின் மற்றும் செல்போன் காணாமல் போகியுள்ளது. மேலும் திலிப்குமார் உடலை சுற்றி  மிளகாய் தூள்கள் போடப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி  உட் கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com