

குருகிராமில் ஆபாசமான காணொளியை தனது கைப்பேசித் திரையை வேண்டுமென்றே பெண் டாக்ஸி ஓட்டுநர் பக்கம் திருப்பியதாகவும், அதை அவர் எதிர்த்தபோது தவறாக நடந்துகொண்டு தன்னை தாக்கியதாகவும் ஒரு பெண் வாடகைக் கார் ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை குருகிராம் போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா நிறுவனத்திற்காக வாகனங்களை ஓட்டும் அந்தப் பெண், அந்த சங்கடமான தருணத்தை தனது கைப்பேசியில் படம்பிடித்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். பின்னர், அது வைரலாகப் பரவியுள்ளது. காவல்துறை தகவல்படி, டிஎல்எஃப் செக்டர்-29 காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதன்கிழமை அன்று, அவர் தனது வாகனத்தை மின்னேற்றம் செய்வதற்காக நிறுத்தியிருந்தபோது, மற்றொரு வாகன ஓட்டுநர் தனது வாகனத்தையும் அவருக்கு அருகில் மின்னேற்றம் செய்வதற்காக நிறுத்தியுள்ளார். அந்த ஆண் வாகன ஓட்டுநர் தனது வாகனத்தில் அமர்ந்தபடியே, தனது கைப்பேசியில் ஆபாசமான காணொளியை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். மேலும் அதன் திரையை வேண்டுமென்றே அந்த பெண் வாகன ஓட்டுநரை நோக்கித் திருப்பியுள்ளார். இந்த அருவருக்கத்தக்க செயலுக்கு அந்த பெண் ஓட்டுநர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அந்த ஆண் ஓட்டுநர் அவரைத் திட்டி, தவறாக நடந்துகொண்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் அர்ஜுன் கமாவத், பீகார், மதுபானி மாவட்டம், பர்சா கிராமத்தில் வசிப்பவர் என்றும், அவர் தற்போது குருகிராமில் உள்ள நாதுபூர், டிஎல்எஃப் கட்டம் -3 இல் வசித்துவருகிறார் என்பதும் காவல்துறை தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறை, "நாங்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கில் சட்ட நடவடிக்கைகள் சட்டப்படியே நடைபெறும். விசாரணை நடைபெற்று வருகிறது," என்று குருகிராம் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்