
பெங்களூரில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் கிலோ கணக்கிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த விரைவு ரயிலில் வந்த பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த பயணிகளை சோதனை செய்தபோது அவர்களிடம் 10 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் சென்னை கொளத்தூரை சேர்ந்த தனபால் என்பது தெரியவந்தது. மேலும் குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.