வீடியோ காலில்.. காதலியை நிர்வாணமாக வரச்சொல்லி ஸ்கிரீன்ஷாட்! உல்லாசத்திற்கு அழைத்த ஜிம் மாஸ்டர் கைது

“நீ என்னுடன் பேசவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்” என மிரட்டி உள்ளார்
chennai crime
Published on: 
Updated on: 
1 min read

சென்னை நம்மாழ்வார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பெண் மாலதி 19 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது வீட்டின் அருகே உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்துள்ளார். அங்கு ஜிம் மாஸ்டராக இருந்த இம்தியாஸ் ஷெரிப் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அதன் பிறகு இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் ஜிம் மாஸ்டர் இம்தியாஸ் ஷெரீப் தொடர்ந்து மாலதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயன்றுள்ளார். மாலதி எவ்வாறு ஆடை அணிய வேண்டும், எங்கு செல்ல வேண்டும், யாருடன் பழக வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலதி கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டு விலக ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவருடன் பேசாமல் இருந்த காரணத்தினால் இம்தியாஸ் ஷெரீப் மாலதிக்கு போன் செய்து “நீ என்னுடன் பேசவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்” என மிரட்டி உள்ளார். அதன் பிறகு மாலதியை வீடியோ காலில் வரவழைத்து அவரை ஆடை இல்லாமல் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு மாலதி மறுத்துள்ளார். உடனே “நீ அவ்வாறு செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று மீண்டும் மிரட்டியுள்ளார்.

பின்னர் வீடியோ காலில் மாலதியை நிர்வாணமாக வரவழைத்து அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்து மாலதியை தனியாக தனிமையில் வர வற்புறுத்தி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாலதி இது குறித்து தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தலைமைச் செயலக காலனி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஓட்டேரி சுபேதார் தெரு பகுதியை சேர்ந்த இம்தியாஸ் ஷெரிப் 27 என்ற ஜிம் மாஸ்டர் மாலதியை மிரட்டி தவறான  நடவடிக்கையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று இம்தியாஸ் ஷெரீப்பை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com