ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்த பி1 - கடற்கரை போலீசார்...

சென்னையில் 70 லட்சம் ஹவாலா பணத்துடன் சுற்றித்திரிந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்த பி1 - கடற்கரை போலீசார்...
Published on
Updated on
1 min read

வடக்கு கடற்கரை போலீசார் இன்று காலை பாரிமுனை ராஜாஜி சாலையில் காலை பி1 - கடற்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு இரண்டு பேக்குகளுடம் நபர் ஒருவர் நின்றிருப்பதை கண்ட போலிசார் அவரை சோதனை செய்ததில் பையில் கட்டுகட்டாக பணம் இருந்துள்ளது. இது தொடர்பாக போலிசார் அவரிடம் விசாரிக்கவே முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலிசார் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் சென்னை ஏழு கிணறு பகுதியை சேர்ந்த 57வயதான சஹாபுதீன் என்பதும் சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது.

சுமார் 70லட்சத்திற்கு சரிவர கணக்கு இல்லாததால் போலிசார் வருமான வரித்துறையினருக்கு தகவல் அளித்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் இருந்து தற்போதுவரை அவர் பயன்படுத்தி வரும் செல்போனை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

வருமான வரித்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அது அவரது வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹவாலா பணம் என்பதும் அதை வேறு ஒருநபருக்கு அவர் கை மாற்ற அங்கு வந்ததும் அதற்குள் போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்துள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் அடுத்த கட்ட விசாரணையிலேயே அந்த பணம் எவ்வாறு ஈட்டப்பட்டது, யாருக்கு கொடுக்கப்பட இருந்தது போன்ற விவரங்கள் தெரியவரும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com