"அவருக்கு ஹார்ட் அட்டாக்" - கள்ளகாதலனோடு ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற மனைவி! அந்தரங்க உறுப்பில் காயம்.. அம்பலமான நாடகம்

நாட்கள் செல்லச் செல்ல, குரேஷிக்கும் பானுவுக்கும் இடையே உருவான உறவு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
குற்றவாளிகள்
குற்றவாளிகள்
Published on
Updated on
2 min read

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரது மரணம், ஆரம்பத்தில் மாரடைப்பால் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மனைவிதான், அவரின் கள்ளக்காதலன் மற்றும் அவரது தாயாரோடு சேர்ந்து கொலை செய்துள்ளார் என்பது விசாரணைக்கு பின்னர் தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 9-ம் தேதி இரவு உயிரிழந்த 40 வயதான முபாரக் பாஷா, பக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக யெல்லப்பா கார்டனில் உள்ள தனது வீட்டில் படுக்கையாகவே இருந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முபாரக் உயிரிழந்ததும், அவரது மனைவி கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக முபாரக்கின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த முபாரக் பாஷாவின் உறவினர்கள் அவரது இல்லத்திற்கு விரைந்துள்ளனர். இந்நிலையில், முபாரக் பாஷாவின் உடலில் இருந்த காயங்களை பார்த்ததும் அவரது சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மற்ற உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் முபாரக் பாஷாவின் மரணத்தினை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பாஷா மூச்சுத்திணறலால் உயிரிழந்ததும், அவரது முகம், கன்னம் மற்றும் பிறப்புறுப்புகளில் காயங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல்துறை அவரது மனைவி ஷஹீனா பானு, அவரது காதலன் நஹீம் உத்தின் குரேஷி மற்றும் அவரது தாய் ஹசீனா ஜானு ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஷாவுக்கும் பானுவுக்கும் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதால் அவர் வீட்டிலேயே முடங்கி இருக்கும் படி ஆகியுள்ளது. இதனால், அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தம்பதியருக்கு ஒரு மகளும் உள்ளார்.

தொடர்ச்சியான கவனிப்பால் ஷஹீனாவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அவரது மகளும் உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குடும்ப நண்பரான குரேஷி அவர்களுக்கு உதவ வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, குரேஷிக்கும் பானுவுக்கும் இடையே உருவான உறவு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இறுதியில், பானுவும் குரேஷியும் பாஷாவைக் கொல்ல முடிவு செய்ததாகவும், பானு அந்த யோசனையை குறித்து தன் தாயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பாஷா தூங்கிக்கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட மூவரும் அவரைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. சுதாரித்த முபாரக் பாஷா அவர்களை எதிர்த்துப் போராடியுள்ளார். ​​ஆனால் அவர்கள் அவரது முகத்திலும் பிறப்புறுப்புகளிலும் அடித்து அவர் இறக்கும் வரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com