கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது தாய் , தந்தை, அக்கா ஆகியோருடன் வசித்து வருகிறார். நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 11 படித்து வரும் சிறுவன் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டி கடந்த 25 ஆம் தேதி தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் சிறுவன் குடும்பத்துடன் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள மாமா வீட்டில் தங்கி இருந்த நிலையில் மறுநாள் அதாவது (மே 26) ஆம் தேதி அன்று குடும்பத்துடன் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் உறவினர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
இதனை அடுத்து சிறுவன் மாமா வீட்டில் இரு நாட்கள் தங்கி இருப்பதாக கேட்டதன் பேரில் பெற்றோர் அவரை உறவினர் வீட்டில் விட்டு விட்டு அவர்கள் சொந்த ஊரான நாகர்கோவிலிலுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று சிறுவன் உறவினர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அவரது உறவினரான மாமா தனது நண்பரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்திய நிலையில் போதை தலைக்கேறி உறவினர் அங்கேயே தூக்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் இருந்த அவரது நண்பர் சிறுவனை எழுப்பி மீதி இருந்த மதுவை அவரது வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றி குடிக்க வைத்துள்ளார்..
மேலும் சிறுவனின் வாயில் தனது ஆண் உறுப்பு வைத்து பாலியில் ரீதியாக துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் செய்வதறியாது அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து அந்த நபர் முகத்தில் அடித்து விட்டு கூச்சலிட்டவாறே கதவை வெளியே பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து சிறுவன் அங்கிருந்த அசோக் நகர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை புகாராக அளித்ததை அடுத்து போலீசார் சிறுவனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுவனுக்கு மதுவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் 35 வயதுடைய வேலப்பன் என்பது அவர் காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அசோக் நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் வேலப்பன் கடந்த 2013 ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்ததும் தற்போது வடபழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மாமா காவலர் வேலப்பன் நண்பர் என்பதால் நேற்று இரவு அவரை வீட்டிற்கு அழைத்து இருவரும் மது அருந்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனை அடுத்து அசோக் நகர் போலீசார் காவலர் வேலப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் சிறுவனின் மாமாவையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்