

மரணம் எப்போது யாருக்கு, எதனால் வரும் என்று சொல்லவே முடியாது. அது ஒரு அழையா விருந்தாளி போல் தான், அது வரும் சமயத்தில் அதனை தடுத்து நிறுத்தும் ஆற்றல் ஒருவருக்கும் இல்லை. சோகத்தில் பெரும் சோகம் ‘புத்திர சோகம்’ என்பர் தாங்கள் வாழும் காலத்திலேயே தங்களின் குழந்தைகளை பறிகொடுப்பதுபோலொரு துயரம் வேறொன்றுமில்லை. மருத்துவ கனவோடு கல்லூரிக்கு வந்த 3 இளைஞர்கள் கார் விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 4 -ம் ஆண்டு படித்து வரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சரண் (24), முகிலன் (23), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராகுல் ஜெபஸ்டியான் (23), கோயம்புத்தூரை சேர்ந்த சாரூபன் (23), தூத்துக்குடியை சேர்ந்த கிருத்திக்குமார் (23), ஆகியோர் நேற்று இரவு கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே காரில் சென்றுள்ளனர்.
அவர்கள் வந்த சமயத்தில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் காரும் அதிவேகமாக வந்துகொண்டிருந்தது, இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள மரத்தின் மீது பெரும் சத்தத்தோடு மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ராகுல் ஜெபஸ்டியன், சாரூபன் ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
காயம்பட்ட முகிலன் என்பவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே பலியானார். மேலும், சரண் மற்றும் கிருத்திக்குமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் மருத்துவ கல்லுரி மாணவர்கள் மூன்று பேர் ஒரே விபத்தில் உயிரிழந்தது தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.