குழந்தையை வைத்து விளையாடிய மருத்துவமனைகள்...காய்ச்சலுக்கு வெறிநாய்க்கடி சிகிச்சை!!

குழந்தையை வைத்து விளையாடிய மருத்துவமனைகள்...காய்ச்சலுக்கு வெறிநாய்க்கடி சிகிச்சை!!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் காய்ச்சலுக்கு வெறி நாய்க்கடி சிகிச்சை அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேரேக்கால் புதூர் பகுதியை சேர்ந்த தனிஷ் (34). - ஷைனி தம்பதியினர். தங்களது இரண்டாவது குழந்தையான 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு  காரணமாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த 25  ம் தேதி  கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தைக்கான மேல் சிகிட்சைக்காக  கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் செயல்படும் மருத்துவமனைக்கு  கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில்  அங்கு சென்ற போது குழந்தையை அவசர சிகிட்சை மையத்தில் அனுமதித்து  அந்த மருத்துவமனை சிகிச்சை அளித்துள்ளனர். 

அப்போது வெறிநாய்க்கடிக்கான சிகிட்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தை உடம்பில் எந்த ஒரு காயமும் இல்லாததால் பெற்றோரும் இதனை உறுதிப்படுத்த முடியாமல் இருந்துள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இது வெறிநாய் கடிக்கான அறிகுறிகள் தான் என உறுதி அளித்து பின் வெறிநாய்கடிக்கு  குழந்தைக்கு மேல் சிகிட்சை தேவை என கூறி ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அங்கு குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை  பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் அளித்த அறிக்கையின்படி வெறிநாய் கடிக்கான மருத்துவத்தை ஆரம்பித்துள்ளனர். மேலும் குழந்தையின் உடல் மோசமாக இருந்ததால் உடனே நேரடியாக தனிமைப்படுத்தி வெறி நாய் கடிக்கான தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை பிழைப்பது முடியாத காரியம் எனவும் ஒரு கட்டத்தில் குழந்தை இறந்து விட்டதாகவும் மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை பார்க்கும் போது குழந்தைக்கு உடலில் அசைவு இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனை கண்ட பெற்றோர் உடனடியாக குழந்தையை கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை  பரிசோதனை செய்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வெறிநாய் கடிக்கான எந்த ஒரு தடயமும் இல்லை என மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு அறிக்கை முறையாக தயார் செய்துள்ளனர். அதில் குழந்தைக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் துரித நிலையில் செய்த காரணத்தினால் குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராக உள்ளது தற்போது குழந்தை நல்ல நிலையில் காணப்படுகிறது.

குழந்தையை முறையாக பரிசோதிக்காமல், எலி காய்ச்சல்க்கு பதிலாக வெறிநாய் கடிக்கு சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com