பொதுக்கூட்டத்தில் மோதல்... ஒருவர் பலி...

பழனிபாபா வரலாற்று விளக்க பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் சிகிச்சை பெற்றுவந்த இருவரில் ஒருவர் பலியாகியுள்ளார். இதில் 4 பேர் கைது, 2பேருக்கு வலைவீசி வருகின்றனர்.
பொதுக்கூட்டத்தில் மோதல்... ஒருவர் பலி...
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி : ஒசூர் அடுத்த கொத்தூர் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் சமுதாய கூடத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பழனிபாபா பேரவை சார்பில் பழனிபாபா அவர்களின் வரலாற்று விளக்க பொதுக்கூட்டத்தில் தாஜ்(22) என்பவர் அவ்வபோது இடையூராக எழுந்து சென்றதால் மகபூப் என்பவர் தாக்கியதாக சொல்லப்படுகிறது, இவர்களுக்கு ஏற்கனவே பகை இருந்த நிலையில், தாஜ் தனது நண்பர்களை ஆயுதங்களுடன் அழைத்துள்ளார்.

கூட்டத்திற்கு தாஜ் நண்பர்கள் 6பேர் ஆயுதங்களுடன் வந்தநிலையில் மகபூப் என்பவரை தாக்க முயன்றதாகவும் கூட்டத்தில் இருந்தவர்கள் தாக்க வந்தவர்களை திருப்பி அடிக்க முயன்றதால் மோதலாக மாறியதில் தாஜ் நண்பர்களில் 6பேரில் 5 பேர் ஓட்டம் பிடிக்க தாஜ், பவுன் பிரகாஷ்(22) ஆகிய இருவரை அடித்ததுடன் அரிவாளால் தலைப்பகுதியில் வெட்டியதில் பலத்த காயங்களுடன்  இருவரும் பெங்களூர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தாஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பவுன் பிரகாஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு தரப்பான மகபூப் வெட்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் இருதரப்பிலும் 3 பேர் காயங்களுடன் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தாஜ்(21) உயிரிழந்தார்.

இந்த மோதலுக்கு காரணமான தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் மன்சூர் அலி கான் உட்பட 4பேர் கைது, 2 பேருக்கு போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com