வேலைக்கு செல்வதாக கூறி.. கள்ளகாதலியுடன் ஓட்டம்! இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் - வேறொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்ததா?

மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் படிக்கும் போதே இருவருக்கும் இடையே காதல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
Instagram love affair
Instagram love affair
Published on
Updated on
2 min read

திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலை பகுதியில் உள்ள அரும்பல்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் நாச்சிமுத்து (28). இவருக்கும் குரும்பேரி அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வள்ளி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள நிலையில் இவர்களுக்கு தற்போது 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவி மற்றும் பிள்ளைகள் ஊரில் இருக்கும் நிலையில் கூலி வேலை செய்வதற்காக சென்னை ரெட்டில்ஸ், காந்திநகர் பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்ய சென்றிருக்கிறார். ஆனால், சென்ற இடத்தில் இருந்து ஒரு பெண்ணுடன் மாயம் ஆகி விட்டார் என்று நாச்சிமுத்துவின் மனைவி வள்ளிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து ஓடி போன மனைவியை கண்டுபிடித்து கொடுக்க வேண்டி நாச்சிமுத்துவின் கள்ளக்காதலியின் கணவர் ரமேஷ் சென்னை, பெரம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நாச்சிமுத்துவின் மனைவி வள்ளி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண்ணுடன் காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தாருங்கள் என்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் புதூர்நாடு, புலியூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷின் மனைவி ஜெகதீஸ்வரி (27) என்ற பெண்ணும், நாச்சிமுத்து என்ற வாலிபரும் மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் படிக்கும் போதே இருவருக்கும் இடையே காதல் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் தினம் தினம் பேசி மேலும் காதலை வளர்த்துள்ளனர். இதனையடுத்து, புதூர் நாடு மலை கிராமத்திலிருந்து இரு வேறு இடங்களில் மேஸ்திரி வேலைக்குச் சென்ற ஜெகதீஸ்வரி மற்றும் நாச்சிமுத்து இருவரும் ஓட்டம் பிடித்ததை அறிந்துள்ளார் அவரது மனைவி வள்ளி. ஏற்கனவே இதற்க்கு முன்னர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்து பிடித்துள்ளார் என்றும் கண்ணீர் மல்க அவரது மனைவி கூறியுள்ளார். அப்போது அவர் படாத பாடுபட்டு நாச்சிமுத்துவை மீண்டும் அழைத்து வந்து அவருடன் வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார்.

ஆனால் தற்போது மீண்டும் பிள்ளைகளோடு சேர்த்து அவரையும் தவிக்க விட்டு விட்டு வேறொரு பெண்ணை அழைத்துச் சென்று விட்டார் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜெகதீஸ்வரிக்கும் திருமணம் ஆகி எட்டு வயதில் ஒரு பிள்ளை உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார். கடன் காரர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை, பிள்ளைகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை, வீட்டில் இருக்கும் நகைகளையும் காணவில்லை என்று கண்ணீருடன் "எனது கணவரை கண்டுபிடித்து தாருங்கள்" என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கிராமப்புறத்தில் இருந்து நகரத்திற்கு கூலி வேலைக்குச் சென்ற கள்ளக்காதல் ஜோடிகள் காணாமல் போனதால் பெண்ணின் கணவரும், நாச்சிமுத்துவின் மனைவியும் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com