“என் பொண்டாட்டி கூட பேச நீ யாருடா” - மனைவியுடன் பழகியவரை திட்டமிட்டு தூக்கிய கணவன்.. ஓட்டேரி பகுதியில் நடந்த சரமாரி தாக்குதல்!

நிஷாவின் நடவடிக்கையில் மாற்றத்தை பார்த்த அவரது கணவர் ஹேமந்த் குமார் மனைவி பின் தொடர்ந்து...
hemanth kumar,kalai,hari
hemanth kumar,kalai,hari
Published on
Updated on
2 min read

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் 39 வயதுடைய கலிமுல்லா. இவருக்கு உறவினர் பெண் ஒருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் எக்சிகியூடிவ்வாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அதே கம்பெனியில் உடன் வேலை செய்யும் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் கலிமுல்லாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து நெருக்கமாக பழகி வந்த நிலையில் கடந்த எட்டு மாதமாக அப்பெண்ணுடன் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் நிஷாவின் நடவடிக்கையில் மாற்றத்தை பார்த்த அவரது கணவர் ஹேமந்த் குமார் மனைவி பின் தொடர்ந்து கவனித்து வந்த போது நிஷா தன்னுடன் வேலை பார்க்கும் கலிமுல்லா உடன் நெருங்கி பழகி வந்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த ஆத்திரமடைந்த ஹேமந்த் குமார் கலிமுல்லாவை கண்டித்து வைக்க நினைத்து திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த (ஏப் 22) ஆம் தேதி காலை கலிமுல்லாவை தொடர்பு கொண்ட கலை என்ற நபர் உங்களிடம் பேச வேண்டும் ஓட்டேரி தாச மகான் பகுதிக்கு வாருங்கள் எனக் கூறியுள்ளார்.

Admin

கலிமுல்லாவும் அன்று மாலை தாச மகான் அருகே சென்றுள்ளார், அப்போது நிஷாவின் கணவர் ஹேமந்த் குமார் “என் பொண்டாட்டி கூட பேச நீ யாருடா” என கேட்டு அவரது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து கலிமுல்லாவை வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று சரமாரியாக அடித்தும், கத்தியால் தாக்கியும் மிரட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த கலிமுல்லா தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கலையரசன் 27, ஹேமந்த் குமார் 30, ஹரிகிருஷ்ணன் 25, என மூன்று பேரை கைது செய்தனர். இதில் கலிமுல்லா பேசி வரும் பெண்ணின் கணவர் ஹேமந்த் குமார் என்பவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து தனது மனைவியுடன் கலிமுல்லா பேசுவதை பிடிக்காமல் அவரை வரவழைத்து சரமாரியாக தாக்கியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com