“கள்ள காதலனுடன் அறையில் தனிமையில் இருந்த மனைவி” - வீடியோவுடன் கையும் களவுமாக பிடித்த கணவன்.. கத்தியால் குத்திவிட்டு கண்ணீர்மல்க பேசிய சம்பவம்!

தர்மராஜா மற்றும் அட்சயா தங்களது நான்கு வயது மகனுடன் வசித்து வந்திருக்கின்றனர்...
“கள்ள காதலனுடன் அறையில் தனிமையில் இருந்த மனைவி” - வீடியோவுடன் கையும் களவுமாக பிடித்த கணவன்.. கத்தியால் குத்திவிட்டு கண்ணீர்மல்க பேசிய சம்பவம்!
Published on
Updated on
2 min read

தஞ்சை மாவட்டம், வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய தர்மராஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய அட்சயா என்பவருக்கும் திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் உள்ளார். தர்மராஜா லாரி டிரைவராக பணியாற்றி வரும் நிலையில் இந்த தம்பதியினர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருச்சியில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தனர். அப்போது அட்சயாவுக்கும் அங்குள்ள ட்ரென்ட்ஸ் கடையில் வேலை பார்த்து வந்த ஜோஷ் என்ற வாலிபருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அட்சயா அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அவரை பார்க்க தர்மராஜா அங்கு சென்ற போது வீட்டில் அட்சயா ஜோஷ் உடன் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை பார்த்து ஆத்திரமடைந்த தர்மராஜா அறைக்குள் இருந்து ஜோஷ் வெளியில் வருவதை வீடியோ எடுத்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். பின்னர் இவர்களை சமாதானம் செய்த நிலையில் பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியேறிய தர்மராஜா மற்றும் அட்சயா தங்களது நான்கு வயது மகனுடன் வசித்து வந்திருக்கின்றனர். அப்போதும் மீண்டும் மனைவி அட்சயா நடத்தையின் மீது ராஜாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தேரோட்ட தகராறில் ஆத்திரமடைந்த தர்மராஜா வீட்டில் இருந்து காய்கறி நறுக்கும் கத்தியால் அட்சயாவின் வாய், கன்னம், உதடு, இடது கை ஆகிய இடங்களில் கீறினார். கீறியதுடன் அட்சயாவை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு தன்னுடைய 4 வயது மகனை தூக்கிச் சென்று விட்டார். இந்நிலையில் அட்சயாவின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து அட்சயாவை மீட்டு இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் அட்சயாவை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அட்சயாவிற்கு படுகாயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் ராஜா என்ற தர்மராஜா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ராஜாவை தேடி வந்தனர். மேலும் அவர் தூக்கிச் சென்ற அவரது 4 வயது மகனும் என்ன ஆனார்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் இன்று காலை போலீசார் தர்மராஜாவை கைது செய்து குழ்நதையை மீட்டுள்ளனர்.

இதற்கிடையில் தர்மராஜா “காவல் துறையினருக்கு வணக்கம் எனது குடும்பமே நாசமாகி விட்டது அதற்கு காரணம் திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த ஜோஷ் என்பவர் தான் அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்னும் சிறிது நேரத்தில் நானும் என் மகனும் கூட உயிரோடு இருக்க மாட்டோம்” என அள்ளுது கொண்டே பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் மனைவியை கத்தியால் குத்திவிட்டு குழந்தையை தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com