“மனைவியை மற்றவர்களுடன் பங்குபோட்ட அரசியல்வாதி” - தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்.. போலீசாரையே குழப்பிய வாக்குமூலம்!

சுயநினைவின்றி இருந்த தனது மனைவியை மற்ற ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்வதைப் பார்ப்பதில் தனக்கிருந்த ஆர்வத்தை பற்றி யங் விவரித்திருப்பது பதிவாகியுள்ளது.
UK husband drugged wife
UK husband drugged wife
Published on: 
Updated on: 
2 min read

உறங்கிக்கொண்டிருந்த தன் மனைவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதற்காக, இணையத்தில் சந்தித்த அந்நியர்களைத் தன் வீட்டிற்கு கணவனே அழைத்து வந்த கொடூரம். தனது "மனைவியைப் பகிர்ந்துகொள்ளும்" விசித்திரமான பாலியல் நாட்டத்தைப் பற்றி காவல்துறையினரிடம் கூறிய காணொளி காண்போரை அதிர்ச்சியில் உறைய செய்தது.

பிரிட்டனின் முன்னாள் உள்ளூர் அரசியல்வாதி 50 வயது பிலிப் யங். இவர் தென்மேற்கு இங்கிலாந்தின் ஸ்விண்டனில் வசித்து வருகிறார். மேலும், மூன்று பிள்ளைகளின் தாயான தனது முன்னாள் மனைவி ஜோன் யங்கிற்கு போதை மருந்து கலந்த ஒரு பானத்தினை கொடுத்துள்ளார். அவர் மயக்கிய பின்னர், அவரை 13 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார் என்ற அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (நவ 19) வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி நடந்த ஒரு காவல் துறை விசாரணையின் போது, ​​சுயநினைவின்றி இருந்த தனது மனைவியை மற்ற ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்வதைப் பார்ப்பதில் தனக்கிருந்த ஆர்வத்தை பற்றி யங் விவரித்திருப்பது பதிவாகியுள்ளது. தனது மனைவிக்கு எதிராக அவர் செய்த குற்றங்களை விவரிக்கும்போது, ​​"எனக்கு மனைவியைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வம் உள்ளது, ஆனால் அவளுக்கு அதில் விருப்பமில்லை," என்று யங் அந்த வீடியோக்களில் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் ஒரே ஒருவருடன் மட்டுமே உறவில் இருப்பவன். மற்ற பெண்களுடன் இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், என் மனைவி மற்ற ஆண்களுடன் உறவில் இருப்பது என் கற்பனையின் ஒரு பகுதி," என்று யங் அந்த வீடியோவில் கூறியிருப்பது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காவல்துறையினர் தரப்பில் இருந்து, "உங்கள் மனைவிக்கும் இதே போன்ற விசித்திரமான பழக்கம் உள்ளதா? என்று கேட்டதற்கு, யங், “அவள் சில சமயங்களில் ஆம் என்பாள், ஆனால் சில நேரங்களில் அப்படி இருக்க மாட்டாள்” என்று பதிலளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் விவரங்களைக் காவல்துறையினர் வற்புறுத்தி கேட்டபோது ​​யங், “நான் அதைத் தெரிவிக்க விரும்பவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், இது தனிப்பட்ட விஷயம்,” என்று கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று, ஜோன் யங்கின் முன்னாள் கணவரால் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நான்கு ஆண்கள், பாலியல் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர். 48 வயதான நார்மன் மாக்சோனி, 62 வயதான ரிச்சர்ட் வில்கின்ஸ், 32 வயதான கோனர் சாண்டர்சன் டாய்ல் 38 வயதான முகமது ஹசன் ஆகியோர் இதில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

யங் முன்னதாக கடந்த ஜனவரியில், தனது முன்னாள் மனைவிக்கு எதிரான 50-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐந்தாவது நபரான, 47 வயதான டீன் ஹாமில்டன், கடந்த பிப்ரவரியில் ஜோவானுக்கு எதிராக இரண்டு பாலியல் வன்கொடுமைக் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

2024-ம் ஆண்டில் தனது மனைவியை அவர் துன்புறுத்தும் காணொளிகளும் படங்களும் அடங்கியிருந்த அவரது மின்னணு சாதனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தண்டனை விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.