Train-க்கு  காத்திருந்த தம்பதி...தின்பண்டம் வாங்க சென்ற கணவன்..இடையில் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

Train-க்கு காத்திருந்த தம்பதி...தின்பண்டம் வாங்க சென்ற கணவன்..இடையில் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

ரெயிலுக்காக காத்திருந்த சமயத்தில் கணவன் தின்பண்டம் வாங்க போக, மனைவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
Published on

உத்தர பிரதேசத்தின் பிரதாப்கார் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையம் ஒன்றில் ரெயிலுக்காக கணவர்- மனைவி இருவரும் காத்திருப்பு அறையில் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண்ணின் கணவர் சாப்பிட தின்பண்டம் வாங்கி வருகிறேன் என்று மனைவியிடம் கூறி விட்டு சென்றுள்ளார். 

இதனிடையே, அந்த பெண் காத்திருப்பு அறையில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். இதையெல்லாம் ஒன்றுவிடாமல் நோட்டமிட்டு இருந்த கழிவறையை தூய்மை செய்யும் ஊழியர் ஒருவர், அந்த பெண் சென்ற கழிவறைக்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.

இதனையடுத்து இந்த சம்பவம் பற்றி தனது கணவரிடம் அந்த பெண் கூற, உடனே அருகில் இருந்த போலீசாரிடம் கணவன் புகார் அளித்தார். அதன்பேரில் அந்த பெண்ணிடம் விசாரணை செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இருப்பினும், ரெயிலுக்கு காத்திருந்த இடத்தில் பெண் பயணிக்கு நடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com