கள்ளக்காதலை கண்டித்த கணவன்! “நள்ளிரவில் வீடுபுகுந்து காதலன் வெறிச்செயல்..” குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம் !!

தலை, கை உள்ளிட்ட ஐந்து இடங்களில் மோசமான வெட்டு விழுந்துள்ளது. இந்த தாக்குதலில் ....
vaniyambadi crime
vaniyambadi crime
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புன்ராஜ், இவரது மனைவி ஜீவா இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன், மற்றும் 2 வயதில் ஒரு மகன், என இரு குழந்தைகள் உள்ளனர்.  

இந்த சூழலில்தான் ஜீவா பிரேம்குமார் என்ற வாலிபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதனை அறிந்த கணவர் அப்பு ராஜ் ஜீவாவை பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒருகட்டத்தில் ஜீவா, பிரேம்குமார் உடனான தனது உறவை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபத்தில் இருந்துவந்துள்ளார் பிரேம். 

நேற்று நள்ளிரவு  ஜீவா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மில்லத்நகரில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார், அப்போது வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே சென்ற பிரேம்குமார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அப்புன்ராஜை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஆனால் ஒருகட்டத்தில் பிரேம் குமார், அன்புராஜை  கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.  

இதில் தலை, கை உள்ளிட்ட ஐந்து இடங்களில் மோசமான வெட்டு விழுந்துள்ளது. இந்த தாக்குதலில்  படுகாயமடைந்த அப்புன்ராஜ் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 மேலும் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய பிரேம்குமாரை வாணியம்பாடி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் கண் முன்னே கணவன் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்  “சட்டத்தின் மீது அச்சம் இல்லாததால் இது போன்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் சாதாரணமாக நடைபெறுவதாக” பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com