

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் தேவரஹிப்பராகி பட்டா பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பிரபு ரத்னாகர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சரோஜினி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் பிரபு அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது குடும்ப செலவுக்காகவும் சொந்த வியாபாரம் செய்வதாகவும் கூறி பல்வேறு இடங்களில் லோன் மற்றும் கடன் வாங்கி இருக்கிறார்.
கடன் மற்றும் லோன் வாங்கி நீண்ட நாட்கள் கடந்த நிலையில் அனைவரும் பணத்தை திருப்பி செலுத்துமாறு பிரபுவை வற்புறுத்தி வந்திருக்கின்றனர். அந்த கடன்களை அடைக்க மேலும் பிரபு தனது மனைவி சரோஜினியின் பெயரில் கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. வழக்கம் போல கணவன் மனைவி இருவருக்கும் கடந்த (ஜன 24) ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த பிரபு ரத்னாகர் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்திருக்கிறார்.
பின்னர் கொலையை மறைத்து தண்டனையில் இருந்து தப்பிக்க சரோஜினியின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்து விட்டு கடைக்கு செண்டை மனைவி திரும்ப வரவில்லை என உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து சரோஜினியின் உறவினர்கள் மற்றும் அவரது மகன் சரோஜினியை தேடி வந்த நிலையில் ஒரு நாள் கடந்தும் அவரை பற்றிய தகவல்கள் தெரியாமல் இருந்துள்ளது. எனவே இது குறித்து உறவினர்கள் போலீசில் புகாரளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற் கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் பிரபு ரத்னாகர் இடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக சொல்லப்படுகிறது. எனவே போலீசார் அவரிடம் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் கடன் பிரச்சனையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரும்பு கம்பியால் சரோஜினியை அடித்து வீட்டிற்குள் புதைத்து தெரியவந்தது. இதனை தொடர்ந்து சரோஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார் பிரபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.