தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை- கணவனுக்கு போலீசார் வலைவீச்சு

பூந்தமல்லியில், தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை- கணவனுக்கு போலீசார் வலைவீச்சு
Published on
Updated on
1 min read

பூந்தமல்லியில், தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருக்கு மனைவி நந்தினி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் பூந்தமல்லி வந்த ஆனந்தராஜ் மற்றும் குடும்பத்தினர், நந்தினியின் சகோதரியான பவித்ராவின் மேல் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளனர்.

வீட்டிலும் ஆள் நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த பவித்ரா அதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வந்தபோது, நந்தினி தாலியால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது 3 குழந்தைகள் மற்றும் ஆனந்தராஜையும் காணவில்லை.

இதனால் ஆனந்தராஜ் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என சந்தேகமடைந்த போலீசார், குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com