

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தனது மனைவின் கள்ளகாதலன் கூடவே அனுப்பிவைத்த கணவனின் செயல் அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் தௌலத்பூர் கிராமத்தில் வசிக்கும் தினக்கூலித் தொழிலாளியான ராஜ்குமார், தனது மனைவியுடன் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இருவருக்கும் திருமணம் ஆகி 6 மாத குழந்தை ஒன்று உள்ளது. திருமணம் ஆனதிலிருந்து கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அடிக்கடி கோவப்பட்டுக் கொண்டு வெளியே சென்று விடுவாராம் மனைவி. வெளியே செல்லும் இவர் மீண்டும் வீட்டிற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்துதான் வருவாராம்.
இதனால் மனைவியின் மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதுபோலவே தனது கள்ளகாதலனோடு அவ்வப்போது வசித்து வந்திருக்கிறார் இவர். உண்மையைக் கண்டறிய மனைவியை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தார் ராஜ்குமார். ராஜ்குமார் நினைத்ததுபோல் அவரது மனைவிக்கு திருமணத்திற்கு மீறிய உறவு இருந்திருக்கிறது. ஒரு நாள் காதலனுடன் செல்போனில் யாருக்கும் தெரியாமல் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் மனைவி. அதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், பதுங்கிச் சென்று செல்போனை வெடுக்கென்று பிடுங்கியிருக்கிறார். அப்போது, செல்போனில் பேசிய நபர் இணைப்பை துண்டித்திருக்கிறார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் அவரது மனைவின் செல்போனை சோதனை செய்து பார்த்துள்ளார். பிறகு செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் ஏராளமான ஆபாசப் படங்கள் இருந்துள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார். அவரது மனைவியின் 'பேஸ்புக்கை' திறந்து சோதனை செய்துள்ளார். அதில் கொலைகள் குறித்த செய்திகள் இருப்பதையும் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். கடந்த ஆண்டு மீரட்டில் முஸ்கான் என்ற பெண் கணவன் சவுரப்பை துண்டு துண்டாக வெட்டி நீல நிற ட்ரம்மில் அடைத்து சிமெண்ட் கலவையை ஊற்றி செப்டிக் டேங்கில் போட்டு அடைத்த செய்தியை ராஜ்குமாரின் மனைவி அடிக்கடி படித்துப் பார்த்திருக்கிறார். இதனால் பேரதிர்ச்சிக்குள்ளானார் ராஜ்குமார். மிரண்டுபோன அவர், அது குறித்து மனைவியிடம் கேட்டபோது, அவரின் தலையசைவு இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனடியாக தாமதிக்காமல், இந்த விவகாரத்தை மகளிர் சமரசப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இரு தரப்பினரும் ஆலோசனைக்காக அழைக்கப்பட்டனர்.
சமரசப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, அப்பெண்ணின் கள்ளகாதலரும் அங்கு வந்து சேர்ந்தார், மேலும் மூன்று பேரிடையே இடையே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. விசாரணையின் போது, ராஜ்குமாரின் மனைவி தனது காதலனுடன் வாழ விரும்புவதாக உறுதியாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, ராஜ்குமாரும் அவரது குடும்பத்தினரும் அவரை, அவரது காதலனுடன் செல்ல ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த முடிவை தனது உயிரைப் பாதுகாப்பதற்காகவே எடுத்ததாக ராஜ்குமார் கூறியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.