"இது என் குழந்தை இல்ல” – புதுமண பெண்ணை உயிரோடு தூக்கிலிட்ட நீதிபதி குடும்பம்!மரணத்திற்கு முன் வந்த கடைசி ‘Phone Call’?

சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மருத்துவ கருக்கலைப்பு செய்யப்பட்டிருந்ததும்
judge family killed daughter in law
Published on
Updated on
2 min read

உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த 33 வயதான ட்விஷா ஷர்மா, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை நரகமாக மாறிவிட்டதாக பலமுறை குடும்பத்தினரிடம் கூறியிருந்த ட்விஷா, தற்போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 12ஆம் தேதி இரவு 10:05 மணியளவில், ட்விஷா தனது தாயை தொலைபேசியில் தொடர்புகொண்டு கதறியபடி பேசினார். கணவர் வீட்டில் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக, தொடர்ந்து அவமானப்படுத்துவதாகவும் அவர் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த உரையாடலின் போது திடீரென அவரது கணவர் அறைக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு ட்விஷா உடனடியாக செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ட்விஷாவையும் அவரது கணவர் சமர்த் சிங்கையும், மாமியார் கிரிபாலா சிங்கையும் பலமுறை தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால் யாரும் அழைப்பை எடுக்கவில்லை. சுமார் 10 நிமிடங்கள் கழித்து, மாமியார் கிரிபாலா சிங் அழைப்பை ஏற்று, “ட்விஷா மூச்சுவிடல” என்று கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக ட்விஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்பட்டாலும், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனை வெறும் 10 நிமிட தூரத்தில் இருந்தபோதிலும், மருத்துவ உதவி பெறுவதில் திட்டமிட்ட தாமதம் ஏற்பட்டதாக ட்விஷாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ட்விஷாவின் சகோதரரும் இந்திய ராணுவ அதிகாரியுமான மேஜர் ஹர்ஷித் ஷர்மா கூறுகையில், “என் சகோதரி தொடர்ந்து குடும்ப வன்முறைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தார். கர்ப்பமாக இருந்தபோதும், குழந்தையை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று கணவர் மற்றும் மாமியார் கடுமையாக அழுத்தம் கொடுத்தனர். குழந்தை முறையற்ற உறவில் உருவானது என்று அவதூறு கூறி அவளை மனரீதியாக சிதைத்தனர்,” என்று பகிர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

மேலும், ட்விஷாவின் தந்தை பரிசாக வழங்கிய ரூ.20 லட்சம் மதிப்பிலான பங்குகள் மற்றும் முதலீடுகளை தனது கணவர் குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றித் தருமாறு வற்புறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில் வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கை பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. ட்விஷா உயிருடன் இருக்கும் போதே கழுத்தில் கயிறு போட்டு தூக்கிலிடப்பட்டதாகவும், அவரது உடலில் பல இடங்களில் மரணத்திற்கு முந்தைய காயங்கள் இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மருத்துவ கருக்கலைப்பு செய்யப்பட்டிருந்ததும் உறுதியாகியுள்ளது.

ட்விஷாவின் மாமியார் ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் கணவர் வழக்கறிஞர் என்பதால் ஆதாரங்கள் சிதைக்கப்படலாம் என அச்சப்படும் குடும்பத்தினர், திருமண வீட்டை உடனடியாக சீல் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டுகளின் கீழ் சமர்த் சிங் மற்றும் கிரிபாலா சிங் மீது காவல்துறை FIR பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com