“இந்த ஆண்டு ராக்கி கட்ட நான் இருக்க மாட்டேன் அண்ணா! ” நெஞ்சை உலுக்கும் தற்கொலை கடிதம்..!!

“என்னால் இந்த உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகளை இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது....
young proffesor died by suicide
young proffesor died by suicide
Published on
Updated on
1 min read

இந்தியா முழுமைக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக குடும்ப வன்முறைகளுக்குள் சிக்கி தவிக்கும் பெண்களின் துயரம் சொல்லி மாளாது, கடந்த மாதம் தமிழகத்தில் ரிதன்யா உட்பட பல பெண்கள் தொடர்ந்து மரணித்தனர், அந்த சோகமே இன்னும் மாறாத சூழலில் நிலையில் நேற்று ஆந்திராவில் 24 வயதான பெண் விரிவுரையாளர் குடும்ப வன்முறையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதிவ்யா (24), அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும் இவருக்கும், ராம் பாபு என்ற நபருக்கும் 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான ஒரே மாதத்தில், தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்து, ஸ்ரீ திவ்யாவை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மோசமாக துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி வேறு ஒரு பெண்ணின் முன்பு “இவள் எதுக்கும் லாயக்கில்லை”என பேசி அவமானப்படுத்தி இருக்கிறார்.

இதனால் மனமுடைந்த அந்த பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது தற்கொலை கடிதத்தில் “என்னால்  இந்த உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகளை இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது,  எனது மரணத்திற்கு என் கணவரும் அவன் வீட்டரும்தான் காரணம். அண்ணா.. என்னால் இந்தமுறை உன்னோடு ராக்கி கொண்டாட முடியாது” என எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். 

24 -வயதே ஆன விரிவுரையாளர் குடும்ப வன்முறையால் இருந்திருப்பது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com