"குழம்பு காரமா இருக்கு.." காதல் மனைவியை அடித்து உதைத்த கணவன்! போலீசார் முன்னிலையிலேயே.. தரதரவென்று இழுத்து சென்று அட்டூழியம்

குழம்பு காரமாக இருப்பதாகக் கூறி, மணிகண்டன் அவரை மரக்கட்டையை கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த செல்வராணி, கணவரிடம் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
Sivaganga husband wife assault
Sivaganga husband wife assault
Published on: 
Updated on: 
1 min read

கணவனிடம் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு மனைவி சென்ற நிலையில், அவரை அழைத்துவருவதற்காக கணவன் சென்றுள்ளார். ஆனால் வரமாட்டேன் என்று மனைவி கூறிய நிலையில் அவரை காவலர்கள் முன்னிலையில் அடித்து தரதரவென்று இழுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் சாத்தரசன்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவரது மனைவி 27 வயதான செல்வராணி. இருவரும் காதலித்து 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவி செல்வராணி சமைத்த குழம்பு காரமாக இருப்பதாகக் கூறி, மணிகண்டன் அவரை மரக்கட்டையை கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த செல்வராணி, கணவரிடம் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து, காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூரில் தனது தாய் தங்கியிருந்து வேலை பார்க்கும் இடத்திற்குச் சென்றுள்ளார். இதையடுத்து, மனைவியைக் காணவில்லை எனத் தேடிச் சென்ற மணிகண்டன், தனது குழந்தைகளுடன் அவரது மனைவி அமராவதிபுதூரில் இருப்பதாய் அறிந்துள்ளார். பின்னர் நேரில் சென்று தனது மனைவியை தன்னோடு வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக சென்றுள்ளார். மணிகண்டன் செல்வராணியை தன்னோடு வீட்டிற்கு வர அழைத்துள்ளார்.

ஆனால், செல்வராணி அவருடன் செல்ல மறுத்துள்ளார். இதனால், கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த சோமநாதபுரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகிய இருவரும் மணிகண்டனை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், போலீசாரின் முயற்சியையும் மீறி, அவர்கள் முன்னிலையிலேயே மனைவியைத் தாக்கி, விரட்டி விரட்டி அடித்து தரதரவென இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாதி மயங்கிய நிலையில் இருந்த அவரது மனைவியை இழுத்து, "வரமாட்டியா..?" என்று கண்ணீர் விட்டு கேட்ட அவரது மனைவி அழுவது காண்போரை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.

போலீசார் முன்னிலையிலேயே மனைவியை அடித்து தரதரவென்று இழுத்துச்சென்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்