இலங்கையில் சட்டவிரோத இறக்குமதி; 20 கோடி சிகரெட்கள் அழிப்பு...!

இலங்கையில் சட்டவிரோத இறக்குமதி;   20 கோடி சிகரெட்கள் அழிப்பு...!
Published on
Updated on
1 min read

இலங்கையில்  கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட   200 மில்லியன் சிகரெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு  நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிதித்துறை  அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, மேற்பார்வையில் சுங்கத்துறை அதிகாரிகளால் கெரவலப்பிட்டியவில் இந்த சட்டவிரோதமாகி இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் அழிக்கப்பட்டன. 

இதுகுறித்து பேசிய நிதியமைச்சர் கூறுகையில், இந்த  சிகரெட்டுகள் அழிக்கப்பட்டதால்,  சுங்கத்துறையால்அரசுக்கு 13 பில்லியன் ரூபாய்  சேமிக்கப்பட்டுள்ளது என்றும், இதை சுங்கத்துறை செய்யாவிட்டால் 1,300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார். 

மேலும், சோதனைக்காக எடுக்கப்பட்ட சிகரெட்டுகள் முற்றிலும் நிறம் மாறிவிட்டந என்றும், அவற்றை சந்தைகளில் விற்க முடியாது எனவும், இதன் காரணமாக அவை அழிக்கப்படவேண்டும் என்றும் கூறினார். அதோடு, இந்த சிகரெட்டுகளை அழிப்பதற்காக இலங்கை புகையிலை நிறுவனத்திடமிருந்து ஒரு சிகரெட் ஒன்றுக்கு 2 ரூபா வீதம் பெறப்பட்டதாகவும், அதன்படி,  அவர்களிடமிருந்து 40 கோடி ரூபாய்   வசூலிக்கப்படும். மூன்று நிறுவனங்கள்  இவற்றை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் சம்பந்தப்பட்ட  நிறுவனங்களிடமிருந்து தலா 25 இலட்சம்  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசின் வருவாய் பங்களிப்புக்கு இது மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார். அதோடு,  இது சமூகமயமாக்கப்பட்டால் 20 கோடி ரூபாய் மதிப்புமிக்க  தரமற்ற சிகரெட்டுகள் விற்பனைக்கு  விடப்பட்டிருக்கும் எனவும்,  இது சுங்க வரலாற்றில் மிகப்பெரிய சிகரெட்டுகளை அழிக்கும் நிகழ்வு எனவும் குறிப்பிட்டார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com