தவணைத் தொகை செலுத்தாதல் குடும்பத்துடன் சிறைவைப்பு: தனியார் நிதி நிறுவனம் அட்டூழியம்!

தவணைத் தொகை செலுத்தாதல் குடும்பத்துடன் சிறைவைப்பு: தனியார் நிதி நிறுவனம் அட்டூழியம்!
Published on
Updated on
1 min read

நாமக்கல்: தவணைத்தொகையை செலுத்தாதல், ஒரு குடும்பத்தையே சிறை வைத்துள்ளனர், தனியார் நிதி நிறுவனத்தினர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் நெடுஞ்சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகன நிதி நிறுவனங்கள், பழைய இரண்டு சக்கர வாகனங்களை தவணை முறையில் விற்பனை செய்து வருகின்றனர். அதே பகுதியிலுள்ள, தனியார் நிதி நிறுவனத்தில், அம்மன் நகர் பகுதியை சேர்ந்த தினேஸ்வரன் என்பவர் இருசக்கர வஃணம் ஒன்றை பத்தாயிரம் ரூபாய்க்கு தவணைமுறையில் கடனாக பெற்றுள்ளார்.

5 தவணைகளுக்கான தொகையினை கட்டிய நிலையில், தனது குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்த தவணை தொகையை செலுத்த முடியவில்லை. இந்நிலையில், நேற்று  மாலை, அவர் பணிபுரியும் இடத்தின் உரிமையாளரின் வாகனத்தை பெற்றுக்கொண்டு, சேலம் நெடுஞ்சாலை பகுதிக்கு வந்த பொழுது, அந்த நிதி நிறுவனத்தினர், அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, அவரையும் வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு, அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இந்த செய்தியை அறிந்த அவரது மனைவி, குழந்தையை தூக்கிக்கொண்டு அந்த அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதையடுத்து, குழந்தை மற்றும் அவரது மனைவியையும், அவருடன் சேர்த்து ஒரு அறையில் தள்ளி பூட்டி வைத்துள்ளனர். 

தினேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சிறைவைக்கப்பட்ட தகவல் அறிந்த, அவரது உரிமையாளர் பிரபாகரன், இது குறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், காவலர்கள் சென்று, குழந்தையுடன் சிறைவைக்கப்பட்ட தம்பதியினரை மீது காவல் நிலையம் கூட்டி வந்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com