தகாத உறவு... தம்பியால் பறிபோன உயிர்...!!

தகாத உறவு... தம்பியால் பறிபோன உயிர்...!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து ஜேசிபி இயந்திரங்களை வாடகை விடும் தொழில் செய்து வருகிறார்.  சில மாதங்களுக்கு முன்பு ஜேசிபி இயந்திரங்களை காண்ட்ராக் விடுவதில் மனோகரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் காவலர் சங்கீதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொழில் ரீதியாக தொடங்கிய நட்பு நாளடைவில் இருவருக்கும் காதலாக மலர்ந்துள்ளது. ஆனால் ஏற்கனவே திருமணமான பெண் காவலர் சங்கீதா பலருடன்  நட்பு வட்டாரத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இவை அனைத்துமே தெரிந்தும் தன் காதலை தொடர்ந்துள்ளார் மனோகரன்.  சர்வ சாதரணமாக இருவரும் வெளியில் செல்வதும் வருவதும் வழக்கமாக கொண்டிருந்த நிலையில் பெண் காவலர் சங்கீதாவிற்கு பணத்தை வாரி இறைந்துள்ளார் மனோகரன்.  இப்படியே காதல் வளர அதற்கு எமனாக வந்தார் சங்கீதாவின் தம்பி.

இந்த தகாத உறவை கண்டித்த அவர் பல முறை காதலை கைவிடும் படி மனோகரனை எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தான்,  வேலை முடித்து விட்டு வரும் வழியில் மனோகரனை வழிமறித்த மர்மநபர்கள் தாக்க முயன்றுள்ளனர்.  இதனால் செய்வதறியாது தப்பித்து சாலையில் அங்குமிங்கும் ஓடிய மனோகரன் அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் ஓடி பதுங்கிய நிலையில்  விரட்டி சென்ற மர்மநபர்கள் அவரை அங்கேயே வைத்து  அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.  இதில் ரத்த வெள்ளத்தில் மனோகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்ட நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com