பள்ளி மாணவர்களுக்கிடையே கத்தி குத்து!” - “முன் விரோதத்தால் நடந்த தாக்குத்தலாம்..” என்னப்பா வயசாகுது உங்களுக்கு எல்லாம்..!

சீகரன் தனது கையில் வைத்திருந்த கத்தி போன்ற சாவியை எடுத்து சதீஷ்குமார் கழுத்து பகுதியில்...
voilence between students
voilence between students
Published on
Updated on
1 min read

ஆரணியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மோதலில் கத்திக்குத்து பலத்த காயமடைந்த மாணவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானம் பகுதியில் அமைந்துள்ள அரசு நிதி உதவி பெறும் பலியான சுப்பிரமணி சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் துந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் கல்லேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வசீகரன் இருவரும் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர் 

இவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இரண்டு கோஷ்டிகளாக மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை துந்தரிகம்பட்டு பகுதியில் இருந்து பள்ளிக்கு அரசு பேருந்தில் வரும்போது மோதல் ஏற்பட்டுள்ளது பின்னர் பேருந்து விட்டு இறங்கி பள்ளிக்கு நடந்து வந்த போது ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மோதல் முற்றி ஒருவருக்கு ஒருவர் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் வசீகரன் தனது கையில் வைத்திருந்த கத்தி போன்ற சாவியை எடுத்து சதீஷ்குமார் கழுத்து பகுதியில் குத்தியுள்ளார் இதில் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு துடித்துள்ளார் கைகளிலும் குத்தியுள்ளார்.

இதனிடையே வசீகரனும் சதீஷ்குமாரை பலமாக தாக்கி உள்ளனர் இரண்டு மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்து அவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆரணி நகர காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்தில் சென்று தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் கத்திக்குத்து வரை சென்ற சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com