அசுரன் பட பாணியில்,...  அண்ணன் கொலைக்கு பழிவாங்கத் துடிக்கும் தம்பிகள்..!

அசுரன் பட பாணியில்,... அண்ணன் கொலைக்கு பழிவாங்கத் துடிக்கும் தம்பிகள்..!

Published on

அண்ணனை கொலை செய்தவர்களை பழிவாங்க கையில் பணம் இல்லாததால் இருவரை வெட்டி விட்டு நகைகளை பறித்து சென்ற நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டு மற்றும் பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் விக்னேஷ், மற்றும் பரசுராமன் இவர்கள் இருவரும் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணி புரித்து வருகின்றனர்.

கடந்த 13ம் தேதி அன்று விக்னேஷ், பரசுராமன் இருவரையும் அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து அடையாளம் தெரியாத ஐந்து மர்ம நபர்கள்  பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் தராததால் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் முதுகு,கை விரல் ஆகிய பகுதிகளில் வெட்டி விட்டு அவர்கள் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயின், 1/4 சவரன் மோதிரம், இரண்டு செல் போன்கள் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு சென்றுள்ளனர். 

உடனே இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தனர், இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை மணிமங்கலம் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில்  கரசங்கால் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த அனவரையும் போலீசார் சுற்றி வளைத்து  மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கூறிய தகவல்கள் போலீசரையே திடுக்கிட வைத்தது. 

சமீபத்தில் மறைமலைநகர் பகுதியில் கொலை செய்யப்பட்ட சந்துருவின் தம்பி  சூர்யா  இந்த கொள்ளை சம்பவத்திற்கு  திட்டம் தீட்டியதும், தனது அண்ணனை கொலை செய்த பூச்சி என்ற ரத்தின சபாபதி உள்ளிட்டவர்களை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பணம் இல்லாததால்  இந்த சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்தது. இதன் பின்னர் பிடிபட்ட ஐந்து பேரிடம் இருந்து நான்கு நாட்டு வெடி குண்டுகள் மற்றும்  வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தபடும் வெடி பொருட்கள், வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com