பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட வெட்டி கொலை...!

Published on
Updated on
1 min read

ஆவடி அருகே பட்டப்பகலில்  இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரண் என்கிற பச்சைக்கிளி. இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வழக்கு சம்பந்தமாக சரண் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்ட பின்பு இருசக்கர வாகனத்தில் நண்பருடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது  திருவேற்காட்டில் இருந்து அயப்பாக்கம் செல்லும் சாலையில் அவர்களை வழிமறித்த கும்பல் சரண் மற்றும் அவரது நண்பர்களை துரத்தி சென்றுள்ளது. இதில் நண்பர்கள் தப்பித்து விட, சரணை மடக்கிய மர்ம கும்பல் தலை மற்றும் மார்பு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com