
தரமணி பகுதியைச் சேர்ந்த நாவியப்பன் அதிகாலை உணவு டெலிவரி செய்ய ஓஎம்ஆர் சாலையில் பெருங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது இரு இளைஞர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து ஒன்றரை சவரன் தங்க சங்கிலியை பறித்துசென்றுள்ளனர். தகவலறிந்த போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிய நிலையில் பெரும்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கத்தி, தங்கச்செயினை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.